(1199)

(1199)

பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும்,

அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே,

மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்,

பணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே.

 

பதவுரை

பிணி அவிழும் நறு நீலமலர்கிழிய

கட்டு அவிழ்கின்ற மணம் மிக்க நீலோற்பல மலர்கள் கிழியும்படியாக

பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும்

பேடையுடனே அழகிய அந்த மலர்களிலிருந்துகொண்டு மதுபானம் பண்ணுகிற

அறுகால சிறு வண்டே

ஆறு கால்களையுடைய சிறியவண்டே!

மணி கெழுநீர்மருங்கு அலரும் வயல்

அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் நாற்பக்கத்திலும் விகளிக்கப்பெற்ற கழனிகளையுடைய

ஆலி

திருவாலியிலே யெழுந்தருளியிருக்கிற

மணவாளன் பணி

மணவாளப்பிள்ளை போன்ற எம்பெருமானுடைய செய்தியை

அறியேன்

இன்னதென்று நானறிகின்றேனில்லை;

என் பயலே நோய் உரையாய்

என்னுடம்பு வேறுபட்டிருந்தலாகிற நோயை சொல்லுவாயாக.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-இப்பாசுரமும் வண்டைத் தூதுவிடுவதாம், மலரத் தொடங்கின நீலமலரிலே குடும்பத் தோடு சென்றழிந்த மதுபானம் பண்ணாநிற்கிற வண்டே! வயலாகி மணவாளன் என்னோடு கலந்து பிரிந்துபோனது முதலாக அவன் நினைத்திருப்பது இன்னதென்று தெரியவில்லை; என்னை மறங்திட்டானோ; அன்றி என்னையே நினைத்துக்கொண்டு கிடக்கிறனோ;இங்கே வருதாக இருக்கிறனோ; என்னை அங்கு வரவழைத்துக் கொள்வதாக இருக்கிறனோ-அன்றி நானொருத்தி இருக்கிறேனென்பதைக் கணிசியாமிலே கிடக்கிறானோ; இப்போது அவன் செய்வதும் செய்ய நினைத்திருப்பது மொன்றும் எனக்குத் தெரியவில்லை; என்னைப் பிரிந்து அவன் வருத்தமற்றிருப்பது போலவே நானும் அவனைப் பிரிந்து வருத்தமற்றிருக்கிறேனாக அப்பெருமான் நினைத்து ஆறியிருக்கவுங்கூடும்; நான் இங்ஙனே நோவுபடுகிறேனென்பது தெரிந்தால் இங்குவந்து சேரத் தாமஸிக்கமாட்டானாதலால், நீ அங்குச் சென்று நான் படுகிறநோயைத் தெரிவிக்க வேணுமென்கிறாள்.

பயலைநோய் -மேனிநிறத்தை வேறுபடுத்திக்கிடக்கிற நோய். பயலை-பசலே; நிற வேறுபாடு.

 

English Translation

Six-legged O Bumble-bees with your spouses enjoying drink, In the lilies blossoming blue, almost shaking off the petals! Go to the groom of Vayalali, living amid lotus thickets. I do not know what he intends, tell him of my paling disease.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top