(1175)

(1175)

பொங்கி யமரி லொருகால் பொன்பெய ரோனை வெருவ,

அங்க வனாக மளைந்திட் டாயிரந் தோளெழுந் தாட,

பைங்க ணிரண்டெரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,

சிங்க வுருவில் வருவான் சித்திர கூடத்துள் ளானே.

 

பதவுரை

ஒருகால் அமரில் பொன் பெயரோன் வெருவ பொங்கி

முன்பொரு காலத்தில் போர்க்களத்தில் ஹிரண்யா ஸூரன் பயப்படும்படியாகக் கிளர்ந்து

அங்கு அவன் ஆகம் அளைத்திட்டு

அவ்விடத்திலே அவ்விரணியனது உடம்பிலே கை வைத்து

ஆயிரம் தோள் எழுந்தாட

(அவனைச் சித்திரவதம் பண்ண வேணுமென்கிற பதற்றத்தாலே ) கைகள்  பலமுகமாகப் பெருக்கமடைய.

எரிகான்ற இரண்டு பைங்கண்

நெருப்பை உமிழ்கின்ற பசுத்த இரண்டு திருக்கண்களையும்

நீண்ட எயிற்றொடு பேழ்வாய் சிங்கம் உருவில் வருவான்

நீண்ட கோரப் பற்களையும்  பெரிய வாயையுமுடைய நரஸிம்ஹ ரூபியாய்க் காட்சி தந்த பெருமான் வருவான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொன்பேயரோன் – வடமொழியில் ” ஹிரண்யம் ” என்பதற்குப் ” பொன் ” என்று பொருளாதலால் ஹிரண்யனென்னும் பெயருடைய அசுரனைப் பொன் பெயரோனென்கிறது. ஆகவே இது லக்ஷித லக்ஷணைஃ

ஆயிரந்தோளெழுந்தாட – பரமபாகவத விரோதியான இரணியனைப் புடைப்பதிலே திருக்கைகளுக்குண்டான பதற்றத்தைப் பலமுகமாக்கி வருணித்த படி. கான்ற என்னும் பெயரெச்சத்தில் கால் என்பது வினைப்பகுதி.

 

English Translation

Once he took on the terrible Hiranya and showed his anger on him. He sported a thousand arms, his eyes blazed like fire, his gaping mouth displayed sharp feline teeth, and he tore the Asura’s chest. He resides in Tillai Tiruchitrakudam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top