(1169)
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட பிள்ளை பரிசிது வென்றால்,
மாநில மாமகள் மாதர் கேள்வ னிவனென்றும், வண்டுண்
பூமகள் நாயக னென்றும் புலங்கெழு கோவியர் பாடி,
தேமலர் தூவ வருவான் சித்திர கூடத்துள் ளானே.
பதவுரை
|
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட இது |
– |
“பேய்ச்சியான பூதனையினுடைய முலையில் (தடவியிந்த) விஷத்தை (அம்ருதமாக) |
|
பிள்ளை பரிசு என்றால் புலன் கெழு கோவியர் |
– |
இச் சிறுபிள்ளளையின் செயல்” என்று சொல்லிக் கேட்டதும |
|
புலன் கெழு கோவியர் |
– |
அழகிய இடைப் பெண்களானவர்கள், |
|
இவன் |
– |
“இக் கண்ணபிரான்” |
|
மா நிலமாமகள் மாதர் கேள்வன் என்றும் |
– |
பூமிப்பிராட்டிக்கு வல்லபன்” என்றும் |
|
வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் பாடி |
– |
“வண்டுகள் மதுவுண்கிற தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு நாதன்” என்றும் சொல்லிப் பாடிக்கொண்டு |
|
தே(ன்) மலர்தாவ |
– |
செவ்விகுன்றாத புஷ்பங்களைப் பணிமாற |
|
வருவான் |
– |
(திருவாய்ப் பாடித் திருவீதிகளிலே) ஸஞ்சரித்த பெருமான் |
|
சித்திர கூடத்து உள்ளான் |
– |
(இப்போது) சித்திரகூடத்திலே ஸேவை ஸாதிக்கின்றான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- புலன்கெழு கோவியர்-கண் மனம் முதலிய இந்திரியங்களைக் கவர்கின்ற அழகிய வடிவுபடைத்த இடைச்சிகளென்கை. (கோபீ) என்ற வடசொல் பன்மையுருபேற்றுக் கோவியர்என்றாயிற்று, “பொலன்கெழு” என்ற பாடமும் உண்டென்று வியாக்கியானத்தினால் விளங்குகின்றது; பொலன்-பொன்மயமான நகைகளினால், கெழு-விளங்குகின்ற=என்க.
English Translation
When the attractive cowherd-dames heard of the child’s wondrous act of sucking the ogress Putana’s poison breast, they worshipped him with fresh flowers saying, “He is verily the husband of Dame Earth, he is the Lord of bee humming lotus-dame Lakshmi”. He resides in Tillai Tiruchitrakudam.
