(1168)
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்றொக்க லிட்டிட்டு,
ஆடல்நல் மாவுடைத் தாயர் ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான்,
கூடிய மாமழை காத்த கூத்த னெனெவரு கின்றான்,
சேடுயர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடத்துள் ளானே.
பதவுரை
|
மருது இடை வாட போகி |
– |
இரட்டை மருதமரங்களின் நடுவே அவை பக்கமடையும் படி தவழ்ந்து சென்றவனாயும், |
|
மல்லரை கொன்று |
– |
மல்லர்ளைக் கொன்றவனாயும், |
|
ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து |
– |
நடைபழகி ஆடிக்கொண்டு வந்த கொடிய (அசுரக்) குதிரையைக் கொன்றவனாயும், |
|
அன்று ஆயர்ஆநிரைக்கு இடர் தீர்ப்பான் |
– |
முன்பொரு காலத்தில் இடையர்கட்கும் பசுக்கூட்டங்கட்கும் நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக |
|
கூடிய மா மழை காத்த |
– |
திரண்ட பெருமழையைத் தடுத்து ரக்ஷித்தவனாயுமிருக்கிற |
|
கூந்தன் என |
– |
கூத்துக்களாடின கோபால க்ருஷ்ணனென்று சொல்லும்படியாக |
|
வருகின்றாள் |
– |
வருமவள் |
|
சேடு உயர்பூ பொழில் தில்லை சித்திரகூடத்த உள்ளான |
– |
இளமை தங்கிய ஓங்கின பூஞ்சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திர கூடத்திலுள்ளான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஒக்கலித்திட்டு என்ற வினையெச்சம் மேலே இரண்டாமடியோடு கூடக்கடவது; ஒக்கலித்திட்டாடல்செய்த குதிரை-நடைபழகுவதுபோல ஆடியசைந்துகொண்டுவந்த குதிரையென்க. “நன்மா” என்றது விபரிதலக்ஷணை, ‘நல்லபாம்பு’ என்னுமாபோலே.
கூத்தனெனவருகின்றான் இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்திலும் ஈற்றடியில் வருநின்றானென்றும் வருவானென்றும் அருளிச்செய்யக் காண்கையாலே, ஆழ்வார் இத்திருப்பதிக்கொழுந்தருளின ஸமயம் பெருமாளுக்குத் திருவீதிப் புறப்பாடாக இருக்கலாமென்று சிலர் கூறுவதுண்டு.
English Translation
The Lord toddled between the Marudu trees and broke them, he ripped apart the jaws of the horse Kesin, he killed the wrestlers, he protected the cows against a hailstorm with a mountain, he danced with pots. He resides in the cool shade of tall bowers in Tillai Tiruchitrakudam.
