(1139)

(1139)

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,

சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,

வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,

சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே.

 

பதவுரை

அமரர்

பிரமன் முதலான தேவர்கள்

கொந்து அலர்ந்த நறுதுழாய்

கொத்துக்கொத்தாக மலர்கின்ற மணம்மிக்க திருத்துழாய்    மலர்களையும்

சாந்தம்

சந்தனத்தையும்

தாபம்

தாபத்தையும்

தீபம்

தீபத்தையும்

கொண்டு

கையிலேந்திக்கொண்டு

தொழ

ஆச்ரயிக்க

பணம் கொள் பாம்பில்

(ஆனந்தத்தினால்) படமெடுத்திருக்கிற திருவனந்தாழ்வான் மேலே.

சந்து அணி மெல் முலை மலரான

சந்தனத்தாலே அலங்கரிக்கப்பட்ட மெல்லியமுலைகளயுடைய பெரிய பிராட்டியும்

தரணி மங்கை

பூமிப்பிராட்டியும்  ஆகிற

இருவர் தாம்

இரண்டு தேவிமார்களும்

அடி வருடும் தன்மையானை

திருவடிகளைப் பிடிக்கும்படியாகவுள்ள எம்பெருமானை,

ஏழ் இசை

ஸப்தஸ்வரங்களையும்

ஆறு அங்கம்

ஆறு அங்கங்களையும்

ஐந்து வளர் வேள்வி

பஞ்ச மஹா யஜ்ளுங்களையும்

மூன்று தீயும்

மூன்று அக்நிகளையுங்கொண்டு

வந்தனை செய்து

எம்பெருமானை யடிபணிந்து

நால் மறைகள்

நான்கு வேதங்களை

இருபொழுதும்

இரவும் பகலும்

சிந்தனை செய்து

அநுஸந்தித்துக்கொண்டு

ஒன்றும்

(வைதிகரிகள்) பொருந்தி வாழ்வதற்கிடமான

செல்வம்

அழகு பொலிந்த

திருக்கோவலூரதனுள்—;

நான் கண்டேன்–.

 

English Translation

The seven Svaras, the six Angas, the five Sacrifices, the four Vedas and the three fires, twice a day praise the one. Celestials offer worship with fresh Tulasi garlands, sandal paste, incense and lamp. The Lord reclines on a serpent bed with sandal-smeared soft-breasted Lakshmi and Earth Dame pressing his feet. I have seen him in the beautiful temple of Tirukkovalur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top