(1140)

(1140)

கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,

அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,

எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,

செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.

 

பதவுரை

அன்று

முன்பொருகால்.

கொழுந்து

தளிர்களையும்

அலரும் மலர்

விகஸிக்கின்ற புஷ்பங்களையுமுடைய

சோலை குழாம் கொள் பொய்கை

சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே

கோள் முதலை

வலிவுள்ள முதலை

வாள் எயிறு

(தனது) வாள் போன்ற பற்களினால்

கொண்டற்கு

காலைக் கவ்வினதற்கு

எள்கி

மெலிந்து

அழுந்திய

வருந்தின

மா களிற்றினுக்கு

கஜேந்திராழ்வானுக்காக

ஆழி ஏந்தி

திருவாழியை எடுத்துக்கொண்டு

அந்தரம் மேவர தோன்றி

ஆகாசம் இடமடையும்படி வந்து தோன்றி

அருள் செய்தானை

(அவ்வானைக்குக்) கிருபை பண்ணின பெருமானை.

எழுந்த

(நீரில்நின்றும்) மேற்கிளம்பின

கரு நீலம் மலர்

கருநெய்தற் பூவானது

இருந்தில் காட்ட

கரிபோல் விளங்கவும்

இரு புன்னை

பெரிய புன்னை மரங்களானவை

அரும்பி

அரும்புகளுண்டாகப் பெற்றதனால்

முத்து

முத்துக்களையும்

(மலர்களுண்டாகப் பெற்றதனால்)

செம்பொன்

பசும்பொன்னையும்

காட்ட

தோற்றுவிக்கவும்,

செழுநீர்தடம் கமலம்

செழித்த நீரையுடைய தடாகங்களில் தாமரைகள்

தீவிகை போல் காட்டும்

விளக்குப்போலே விளங்கவும் பெற்ற

திருக்கோவலூரதனுள் , நான் கண்டேன்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இரண்டாமடியில் , ‘அந்தரமேவர” என்பதை ,’அந்தரம் மேவர’ என்றுபிரிக்க.  மே—-வினைப்பகுதி: ‘வா’ என்பது துணைவினை:  மேவ என்றபடி.  மேவுதலாவது இடமடையும்படி நிரம்பியிருத்தல்.  கஜேந்திராழ்வானுக்கு அருள்செய்ய எம்பெருமான் எழுந்தருளினபோது ஆகாசம் இடமடையும்படி யெழுந்தருளினானென்றது. அவனெழுந்தருளின  பெருமையைச் சொன்னபடி.

பின்னடிகளால் திருக்கோவலூரின் வயல்வாய்ப்பையும் பொழில்வாய்ப்பையும் வருணிக்குமாழ்வார்,  அவ்வுரை ஒரு பொற்களரியாக உருவகப்படுத்தி வருணிக்கிறார்:

(பொற்களரியானது—தட்டானுடைய காரியச்சாலை)  அது எப்படியிருக்குமென்றால், அங்கே கரிகள் கொட்டப்பட்டு நிரம்பியிருக்கும்:  பொன்களும் முத்துக்களும் நிறைந்திருக்கும்:  நெருப்பு

ஜ்வலித்துக் கொண்டிருக்கும்.  இங்கே, கருநீல மலர்கள் கரியாகவும், புன்னைமொக்குகள் முத்தாகவும், புன்னைப்பூக்கள் பொன்னாகவும், தாமரைப்பூக்கள் நெருப்பாகவும் திகழ்வனவாம்;.

 

English Translation

In the lake amid fragrant bowers the crocodile with strong griping jaws held the elephant by his foot. To save the suffering devotee, our Lord came with his discus and showered his grace. The blue water lilies display his dark hue, the Punnai trees show his pearly teeth and golden hue, the red lotuses in the tank blossom like lamps, I have seen him in the beautiful temple of Tirukkovalur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top