(1137)
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே.
பதவுரை
|
பார்மன்னு தொல் புகழ் |
– |
இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய |
|
பல்லவர்கோன் |
– |
பல்லவராஜன் |
|
பணிந்த |
– |
கைங்கரியங்கள் செய்யப்பெற்ற |
|
பரமேச்சுரவிண்ணகரிமேல் |
– |
பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக |
|
கார்மன்னு நீள்வயல் |
– |
சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய |
|
மங்கையர்தம்தலைவன் |
– |
திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான |
|
கலிகன்றி |
– |
கலியன் |
|
குன்றாது |
– |
இலக்கணக் குறையொன்றுமின்றி |
|
உரைத்த |
– |
அருளிச்செய்த |
|
சீர்மன்னு செம் தமிழ் மாலை |
– |
அழகு பொருந்திய செந்தமிழினாகிய இப்பாமாலைகள் |
|
வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
|
திரு மா மகள் தன் அருளால் |
– |
பெரிய பிராட்டியாருடைய கிருபையினால் |
|
உலகில் |
– |
இவ்வுலகத்திலே |
|
தேர்மன்னர் ஆய் |
– |
தேரை நடத்தவல்ல அரசர்களாகி |
|
ஒலி மா கடல் சூழ் |
– |
ஆரவாரிக்கின்ற பெரிய கடலாலே சூழப்பட்ட |
|
செழு நீர்உலகு |
– |
செழிப்பான நீர்மையையுடைய உலகையெல்லாம் |
|
ஆண்டு |
– |
ஆண்டுகொண்டு |
|
திகழ்வர்கள் |
– |
விளங்குவார்கள். |
English Translation
The world renowned Pallava king of lasting fame offers worship at Paramecchura Vinnagaram, which the fertile Mangai-tract’s king Kalikanri has sung in a proper-Tamil song-garland. Those who master it will, by the grace of Lakshmi, rule the Earth as crowned kings and enjoy Heaven.
