(1129)
கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
பதவுரை
|
கார்மன்னு நீள் விசும்பும் |
– |
மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன |
|
கடலும் |
– |
ஸமுத்திரங்களென்ன |
|
சுடரும் |
– |
சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன |
|
நிலனும் |
– |
பூமியென்ன |
|
மலையும் |
– |
குலபர்வதங்களென்ன |
|
(ஆகிய இவையெல்லாம்) |
||
|
தன் உந்தி தார்மன்னு |
– |
தனது திருநாபிக் கமலத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற |
|
தாமரை கண்ணன் |
– |
புண்டரிகாக்ஷனுக்கு |
|
இடம் |
– |
இருப்பிடமாவது |
|
தடம் மா மதிள் சூழ்ந்து |
– |
தடாகங்களாலும் பெரிய மதிள்களாலும் சூழப்பட்டு |
|
அழகாக கச்சி |
– |
அழகான காஞ்சீபுரியிலே, |
|
முனையில் |
– |
போர்க்களத்திலே |
|
தேர்மன்னு தென்னவனை |
– |
மஹாரதனான பாண்டிய ராஜனுடைய |
|
செரு வில் திறல் வாட்டிய |
– |
சண்டை செய்யும் வில்லின் வலியைப் பங்கப்படுத்தின |
|
திண் சிலையோன் |
– |
வலிய வில்லையுடையனாய் |
|
பார்மன்னு |
– |
இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த |
|
பல்லவர்கோன் |
– |
பல்லவராஜன் |
|
பணிந்த |
– |
கைங்கரியம் செய்யப்பெற்ற |
|
பரமேச்சுர விண்ணகரம் அதுவே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விசும்பு, கடல், சுடர், நிலம், மலை முதலான பொருள்கள் உந்திக்கமலத்திலே மன்னியிருக்கையாவது இவற்றுக்கெல்லாம் பிறப்பிடமா யிருக்கை. இத்தால்—உலகங்களைப்படைப்பவனான நான்முகக் கடவுளைப் பிறப்பித்த உந்திக் கமலத்தை யுடையவன் என்பதாகக் கொள்க. உந்தித்தார்–தார்என்று புஷ்பத்துக்கும் பெயர்.
English Translation
The big cloud-bearing sky, the oceans, the orbs, the Earth, the mountains, were created on the Lord’s lotus navel. He resides in the high walled city of Kanchi. The chariot-riding Pandya king was routed by the strong bow-wielding monarch Pallava king, who comes to offer wors. Hip in the temple of Paramecchura Vinnagaram.
