(1129)

(1129)

கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித்

தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,

தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,

பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

 

பதவுரை

கார்மன்னு நீள் விசும்பும்

மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன

கடலும்

ஸமுத்திரங்களென்ன

சுடரும்

சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன

நிலனும்

பூமியென்ன

மலையும்

குலபர்வதங்களென்ன

(ஆகிய இவையெல்லாம்)

தன் உந்தி தார்மன்னு

தனது திருநாபிக் கமலத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற

தாமரை கண்ணன்

புண்டரிகாக்ஷனுக்கு

இடம்

இருப்பிடமாவது

தடம் மா மதிள் சூழ்ந்து

தடாகங்களாலும் பெரிய மதிள்களாலும் சூழப்பட்டு

அழகாக கச்சி

அழகான காஞ்சீபுரியிலே,

முனையில்

போர்க்களத்திலே

தேர்மன்னு தென்னவனை

மஹாரதனான பாண்டிய ராஜனுடைய

செரு வில் திறல் வாட்டிய

சண்டை செய்யும் வில்லின் வலியைப் பங்கப்படுத்தின

திண் சிலையோன்

வலிய வில்லையுடையனாய்

பார்மன்னு

இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த

பல்லவர்கோன்

பல்லவராஜன்

பணிந்த

கைங்கரியம் செய்யப்பெற்ற

பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விசும்பு, கடல், சுடர், நிலம், மலை முதலான பொருள்கள் உந்திக்கமலத்திலே மன்னியிருக்கையாவது இவற்றுக்கெல்லாம் பிறப்பிடமா யிருக்கை.  இத்தால்—உலகங்களைப்படைப்பவனான நான்முகக் கடவுளைப் பிறப்பித்த உந்திக் கமலத்தை யுடையவன் என்பதாகக் கொள்க.  உந்தித்தார்–தார்என்று புஷ்பத்துக்கும் பெயர்.

 

English Translation

The big cloud-bearing sky, the oceans, the orbs, the Earth, the mountains, were created on the Lord’s lotus navel. He resides in the high walled city of Kanchi. The chariot-riding Pandya king was routed by the strong bow-wielding monarch Pallava king, who comes to offer wors. Hip in the temple of Paramecchura Vinnagaram.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top