(1127)

(1127)

மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்,

தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை,

கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.

 

பதவுரை

தொண்டையர்கோன்

தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான

மன்னவன்

அரசனாலே

வணங்கும்

வணங்கப்பட்ட

நீள்முடி மாலை

நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும்,

வயிரமேகன் தன் வலி

வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த

புகழ் சூழ்ந்த கச்சி

காஞ்சிபுரியிலே

அட்டபுயகரத்து

திருவட்டபுயகரத்திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனாயுமுள்ள

ஆதிதன்னை

முதல்வனான எம்பெருமானைக்குறித்து

கன்னி நல் மாமதிள் மங்கை வேந்தன்

அழிவற்ற நல்ல பெரிய மதிள்களையுடைய திரு மங்கைக்குத் தலைவரும்

காமரு சீர்

விரும்பத்தக்க குணங்களையுடையவருமான

கலிகன்றி

கலியன்

குன்றா இன் இசையால்  சொன்ன

குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த

செம் சொல் மாலை

அழகிய இச்சொல் மாலையைக்கொண்டு

ஏத்த வல்லார்க்கு

(எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களுக்கு

இடம் வைகுந்தம்

இருப்பிடம் வைகுண்டமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முற்காலத்தில் பலபல அரசர்கள் பல திவ்யதேசங்களை அபிமானித்து ஸநிநிதி ஜீர்ணோத்தாரணம் முதலிய சிறப்புகளைச் செய்துவந்தார்கள்; இத்திருவட்டபுகரத்தை வயிரமேக னென்னும் ஒரு தொண்டைநாட்டரசன் அபிமாநித்திருந்தமையால் அதனை யருளிச்செய்கிறார் முன்னடிகளில்.

 

English Translation

The Tondaman king Vairamegan came to offer worship for the Lord an Attabuyakaram in Kanchi, where the king’s name is known everywhere. This garland of the sweet Tamil songs is by Kalikanri, king of the high-walled Mangai tract. Those who can sing it will find a place in Vaikunta.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top