(1113)
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி மென்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
பதவுரை
|
இடவெந்தை எந்தை பிரானே!; |
||
|
(இப்பெண்பிள்ளையானவள்) |
||
|
தன் குடிக்கு தக்க ஆ |
– |
தனது குலமரியாதைக்குத் தகுந்தபடியை |
|
ஏதும் நினையாள் |
– |
சிறிதும் ஆராய்கின்றிலள்; |
|
தட கடல் |
– |
பெரிய கடலோடும் |
|
நுடங்கு எயில் |
– |
வளைந்த மதிளோடும் கூடின |
|
இலங்கை |
– |
இலங்கையிலிருந்த |
|
வல்குடி |
– |
வலிய ராக்ஷஸகுலமானது. |
|
மடங்க |
– |
அழியும்படி |
|
வாள் அமர்தொலைத்த வார்த்தை கேட்டு |
– |
கொடிய போர்க்களத்திலே ஒழித்த செய்தியைக் கேட்டு |
|
இன்புறும் |
– |
(ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்வதே! என்று) ஈடுபடாநின்றாள்; |
|
மயங்கும் |
– |
(அப்பிராட்டிக்குப்போல நமக்கும் ஒரு காரியம் செய்வதில்லையே! என்று வருந்தி) மூர்ச்சிக்கின்றாள்; |
|
மின்கொடி மருங்குல் சுருங்க |
– |
மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி |
|
மென் முலை |
– |
மெல்லிய முலைகளானவை |
|
மேல் நெருங்கி |
– |
மார்பின்மேலே (ஒன்றோடொன்று ) நெருக்கமுற்று |
|
பொன் பயந்திருந்த |
– |
பசலை நிறமுடைத்தாம்படியிருக்கின்ற |
|
என் கொடி இவளுக்கு |
– |
எனது இப்பெண்பிள்ளை திறத்திலே |
|
என் நினைந்திருந்தாய் |
– |
என்ன செய்வதாகத் திருவுள்ளம்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பெண்பிள்ளை ப்ரபந்நகுல மரியாதைக்குத் தகுந்தபடி வர்த்திக்கப் பார்க்கிறாளில்லை; சேஷபூதர் சேஷியினிடத்திலே பாரத்தை வைத்தபின்பு “களைவாய்துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்றாற்போலே அவன் செய்தபடி செய்துகொள்க வென்று ஆறியிருப்பதே ப்ரபந்நகுல மரியாதையாகும்; இவள் அப்படி ஆறியிராமல் பதறுகின்றாளாகை யாலே தன்குடிக்கேதும் தக்கவா நினையாள்.
English Translation
She doesn’t think a good thought befitting her family, she knows only to hear and lose herself in the story of the war fought to destroy the high walled ocean-girdled Lanka’s clan. My girl with a lightning thin waist has shrunken, her lighted twin breasts have paled, O! Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!
