(1098)
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே.
பதவுரை
|
பெண் ஆகி |
– |
மோஹிநிபவதாரமெடுத்து, |
|
நண்ணாத வாள் அவுணரிடைபுக்கு |
– |
பிரதிகூலர்களான அசுரர்களின் நடுவே புகுந்து |
|
(அவர்களை வஞ்சித்துவிட்டு) |
||
|
வானவரை அமுது ஊட்டும் பெருமானார் |
– |
தேவர்களுக்குமாத்திரம் அமுதமனித்த ஸ்வாமியாயும், |
|
மருவ இனிய |
– |
பொருந்தி வாழ்வதற்குப் பாங்கான |
|
தண் ஆர்ந்த |
– |
குளிர்ந்திநிரம்பிய |
|
கடல்மல்லை தலசயனத்து |
– |
திருக்கடல்மல்லை யென்னும் திருப்பதியில் |
|
உறைவாரை |
– |
நித்யவானம் செய்பவராயுமிருக்கிற ஸ்தலசாயிப்பெருமாளை |
|
எண்ணாதே இருப்பாரை |
– |
சிந்தியாமலிருப்பவர்களை |
|
இறைபொழுதும் |
– |
அற்பகாலமும் |
|
எண்ணோம் |
– |
ஒரு பொருளாக நினைக்கமாட்டோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
திருக்கடல்மல்லைத் தலசயனத்துறைவாரைச் சிந்தை செய்யாதவர்கள் பதார்த்தகோடியிலேயே சேராதவாகளாகையால் அபதார்த்தங்களான அவர்களை நான் ஒரு பொருளாகவே மதிக்கமாட்டேனென்கிறார். தலசயனத்துறைவாரைச் சிந்திக்கும் மஹான்களையே நான் அநவரதம் சிந்திப்பேன் என்பது தேறும்.
நண்ணாத = பகவத்விஷயத்தில் பகையை இயற்கையாகவுடைய என்றபடி. ஸாதுக்களைக் கண்டவுடனே கொல்வற்காக வாட்படையைக் கையோடே வைத்துக்கொண்டிருப்பவர்களாதலால் “வாளவுணர்” என்றார்;.
English Translation
Going between the unrelenting Asuras dressed as a female, the lord gave ambrosia to the gods. He resides in cool, fragrant kadal Mallai as Talasayanam, a form reclining on the ground. We shall not regard those who do not even for a moment think of him.
