(1082)
மாலுங்கட லாரம லைக்குவடிட் அணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப் படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால் கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
பதவுரை
|
ஒரு கால் |
– |
முன்னொருகாலத்திலே |
|
மாலும் கடல் ஆர |
– |
பெரிய கடல் நிறையும்படி |
|
மலை குவடு இட்டு |
– |
மலைக் கொடுமுடிகளைக் கொண்டு போட்டு |
|
வரம்பு உருவ |
– |
அக்கரையிலே சென்று சேரும்படி |
|
அணை கட்டி |
– |
ஸேது கட்டி, |
|
மதி சேர் |
– |
சந்திரன் வரையில் ஓங்கியிருக்கிற |
|
கோலம் மதிளாய |
– |
அழகிய மதில்களையுடைத்தான |
|
இலங்கை |
– |
லங்காபுரியானது |
|
கெட |
– |
அழியும்படியாக |
|
படை தொட்டு |
– |
ஆயதங்களைச் செலுத்தி |
|
(அவ்வளவிலும் இராவணன் சளைக்காமல்) |
||
|
அமரில் அதிர |
– |
போர்க்களத்தில் நின்று குமுறின வளவிலே |
|
இதுகாலம் என்று |
– |
இவனை முடிப்பதற்கு இதுவே தக்க ஸமயமென்று கொண்டு |
|
அயன் வாளியினால் |
– |
ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே |
|
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து |
– |
(கிரீடங்களால்) ஒளிபெற்ற நீண்ட பத்துத் தலைகளையும் அறுத்து |
|
அமரும் |
– |
அயோத்திமாநகரில் பிராட்டியும் தானுமாக வந்து சேர்ந்த |
|
நீலம் முகில் வண்ணன் |
– |
காளமேக நிறத்தனான |
|
எமக்கு இறைவற்கு |
– |
எம்பெருமானுக்கு |
|
இடம் மாமலை ஆவது நீர்மலையே- |
||
English Translation
Once the Lord filled the lashing ocean with rocks and built a bridge, and entered the city of Lanka whose walls touch the moon. He waged a war that destroyed the city, then deciding that Ravana should die; he aimed his Brahma-Astra that felled the king’s ten crowned heads. He is the dark hued Lord, our master. Tirunirmalai is His great hill abode.
