(1061)
பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே.
பதவுரை
|
பந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால் |
– |
பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக |
|
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் |
– |
க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும், |
|
விரி புகழ் சேர் நந்தன் |
– |
உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு |
|
மைந்தன் ஆக ஆகும் நம்பி |
– |
திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும் |
|
நம்பெருமான் |
– |
நமக்கு ஸ்வாமியும் |
|
எந்தை தந்தை தம்பெருமான் |
– |
நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன் |
|
எவ்வுள் கிடந்தான்-. |
||
English Translation
For the sake of the beautiful Nappinnai of thin ball-clasping flingers. He battled against seven bulls. He is the Lord who was brought up as the world famous Nandagopala’s son. He is out Lord; he reclines in Evvul.
