(1061)

(1061)

பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,

வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,

நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,

எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே.

 

பதவுரை

பந்து அணைந்த மெல் விரலாள் பாவைதன் காரணத்தால்

பந்து பொருந்திய மெல்லிய விரல்களை யுடையளான நப்பின்னைப்பிராட்டி நிமித்தமாக

வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன்

க்ரூரமான மிடுக்கையுடைய ஏழுரிஷபங்களையும் வென்று முடித்த அரசனும்,

விரி புகழ் சேர் நந்தன்

உலகமெங்கும் பரந்த புகழையுடையனான நந்தகோபனுக்கு

மைந்தன் ஆக ஆகும் நம்பி

திருக்குமாரனாக அவதரித்த பரிபூர்ணனும்

நம்பெருமான்

நமக்கு ஸ்வாமியும்

எந்தை தந்தை தம்பெருமான்

நம்குலத்துக்கெல்லாம் நாதனுமானவன்

எவ்வுள் கிடந்தான்-.

 

English Translation

For the sake of the beautiful Nappinnai of thin ball-clasping flingers. He battled against seven bulls. He is the Lord who was brought up as the world famous Nandagopala’s son. He is out Lord; he reclines in Evvul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top