(1037)

(1037)

கண்ணா யேழுலகுக் குயிராய வெங்கார்வண்ணனை*

விண்ணோர் தாம்பரவும் பொழில்வேங்கட வேதியனை*

திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்கோன் கலியன்*

பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க் கில்லை பாவங்களே

பதவுரை

ஏழ் உலகுக்கு

எல்லா வுலகங்களுக்கும்

கண் ஆய்

கண் போன்றவனும்

உயிர் ஆய

உயிர் போன்றவனும்

எம்

எமக்காக

கார் வண்ணணை

மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும்

விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம்

நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே

வேதியதனை

வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து

திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன்

திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)

பண் ஆர் பாடல் பத்தும்

பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும்

பயில்வார்க்கு

ஓதுமவர்களுக்கு

பாவங்கள் இல்லை

பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1037

கண் ஆய், ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை;
விண்ணோர்தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை;
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன், கலியன்;
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை, பாவங்களே. [1-9-10]

 

***[கண்ணாயேழுலகுக்கு.] “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி ஏழுலகத்தவர்க்கும் கண்போன்றவனும் உயிர்போன்றவனுமான திருவேங்கடமுடையானைக் குறித்துத் திருமங்கைமன்னனருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் பறந்தோடுமென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

அடிவரவு:- தாய் மான் கொன்றேன் குலம் எப்பாவம் மண் தெரியேன்நோற்றேன் பற்றேல் கண்ணாய் கண்.

ஒன்பதாந்திருமொழி உரை முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

 

English Translation

The cloud-hued Lord, dear to the seven world, -as eyes and life-breath,–is the Vedic Lord of Tiruvenkatam hills amid groves where even celestials come to offer worship. The strong walled Tirumangai king kaliyan has sung pan-based garland of songs in his paise. Those who master it will become freed of karma.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top