(1031)

(1031)

குலந்தானெத்தனையும் பிறந்தே யிறந்தெய்த்தொழிந்தேன்*

நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்*

நிலம் தோய் நீள்முகில்சேர் நெறியார் திருவேங்கடவா!*

அலந்தேன் வந்தடைந்தே னடியேனை யாட்கொண்டருளே.

பதவுரை

நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா

பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே!
எத்தனை குலமும்

எல்லாக்குலங்களிலும்
பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன்

பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும்
நலம் ஒன்றும் இலேன்

ஒருவகை நன்மையுமில்லாதவனும்
நல்லது ஓர் அறமும் செய்திலேன்

நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும்
அலந்தேன்

பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன்
வந்து அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்;

அடியேனை ஆட்கொண்டருள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

#1031

குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து, எய்த்தொழிந்தேன்;

நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்;

நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!;

அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. (1-9-4).

*** – அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று. இன்னமும் பிறவிகள் பிறக்க வேண்டும்படியான கரும சேஷமிருந்தாலும் பிறப்பதற்கு சக்தியில்லாதபடி மிகவும் மெலிந்துபோனேன். இப்படிப் பலபல யோனிகளிற் பிறந்து வருகிற நாளிலே நடுவே ஒரு ஸுக்ருதமாகிலும் செய்ததுண்டோவென்னில் அஜ்ஞாதம் யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகம் – ஒன்றிலும் அந்வயமுடையேனல்லேன். அஜ்ஞாத ஸுக்ருதமாவது இது ஒரு நல்ல காரியமென்று தனக்கும் தெரியாமல் நேரும் ஸுக்ருதம்; ஒரு பசுவைக் கொலைசெய்யத் துரத்திக்கொண்டுபோம்போது அப்பசு ஒரு பகவத்சந்நிதியை வலஞ்செய்து கொண்டுபோக, அதை பின் தொடர்ந்துபோமவனுக்கு பகவதாலேயே ப்ரதக்ஷிணமாகிற ஸுக்ருதம் தனக்குத் தெரியாமலே நேருவதுண்டிறே. யாத்ருச்சிகஸுக்ருதமாவது-தான் எதிர்பாராமலிருக்கச் செய்தே பார்த்ததாக நேரும் ஸுக்ருதம். பகவத்பாகவதர்களை ஸேவிக்க வேணுமென்கிற எண்ணமில்லாமல் கொள்ளைகொல்லப் போமிடத்தில் பகவத் பாகவத ஸேவையும் கிடைப்பதுண்டிறே. ப்ராஸங்கிகஸுக்ருதமாவது-வேறோரு காரியத்தைச் செய்யும்பொழுது இதுவுங்க்கூட இருக்கட்டும் என்று செய்யுமது. வெங்காயச் செடிக்குத் தண்ணீரிறைக்கும்போது, “தாஹித்தவர்களும் இந்த நீரைப்பருகிக் களைப்பாறுக” என்றெண்ணி இறைப்பதுண்டிறே.

இப்படிப்பட்ட ஸுக்ருதங்களொன்றிலும் அந்வயமுடையனல்லேனாயினும் “இனி நமக்கு ஒரு பாபமும் செய்ய சக்தியில்லை; இளைத்துத் திருவடிகளிலே வந்து விழுந்து விட்டேன்: பழைய குற்றங்களைப் பாராமல் அடியேனை அடிமை கொண்டருள வேணுமென்றாராயிற்று.”

நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் என்றதன் கருத்து:- மேகங்கள் கழுத்தளவும் நீரைப்பருகி, நீர்க்கனத்தாலே கால்வாங்கிப் போகமாட்டாமல் நகர்ந்து நகர்ந்து துளித்துத் துளித்துக்கொண்டு ஸஞ்சரித்த அடையாளம் வழிகளிலே விளங்காநின்றதென்கை… (4)

English Translation

In how many families I have taken birth, and died, labouriously. I have no goodness, nothing good have I done so far.  Dark clouds rub the ground; over the foot paths’. In the hill of Tiruvenkatam. Today I have come to you. Pray take me into your service!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top