(1023)
எண்டிசைகளு மேழுலகமும் வாங்கிப் பொன்வயிற்றில் பெய்து*
பண்டோராலிலைப் பள்ளிகொண்டவன் பான்மதிக் கிடர்தீர்த்தவன்*
ஒண்டிறலவுண னுரத்துகிர் வைத்தவனொள்ளெயிற்றொடு*
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடை நெஞ்சமே!
பதவுரை
பண்டு | – | முன்னொருகால், |
எண் திசைகளும் | – | எட்டுத் திக்குகளையும் |
ஏழ் உலகமும் | – | ஸப்த லோகங்களையும் |
வாங்கி | – | (பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து |
பொன் வயிற்றில் | – | (தனது) அழகிய திருவயிற்றிலே |
பெய்து | – | இட்டுவைத்து |
ஓர் ஆல் இலை | – | ஒரு ஆலந்தளிரிலே |
பள்ளி கொண்டவன் | – | சயனித்தருளினவனும் |
பால் மதிக்கு | – | வெளுத்த சந்திரனுக்கு |
இடர் | – | க்ஷயரோகமாகிற துக்கத்தை |
தீர்த்தவன் | – | போக்கினவனும், |
ஒள் எயிற்றோடு | – | ஒளிபொருந்திய கோரப் பற்களோடு கூடி |
திண் திறல் அரி ஆயவன் | – | மிக்க வலிவுடைய நரசிங்கமூர்த்தியாகத் தோன்றினவனாய் |
ஒண் திறல் அவுணன் | – | மஹா பலசாலியான இரணியாசுரனுடைய |
உரத்து | – | மார்விலே |
உகிர் | – | (திருக்கை) நகங்களை |
வைத்தவன் | – | வைத்து அழுத்தினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற |
திருவேங்கடம் நெஞ்சமே! அடை-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1023
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி, பொன் வயிற்றில் பெய்து,
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன், பால் மதிக்கு இடர் தீர்த்தவன்,
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன், ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு வேங்கடம் அடை, நெஞ்சமே! —(1-8-6)
* * * –(எண்டிசைகளும்.) உலகங்களெல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாதபடி அவற்றைத் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கி ஓராலந்தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி யருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருவவதரித்து, தன் வலிவோடு ஒத்தவலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை யூன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே! எண் திசைகளும் = கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்ற நான்கு திசைகளும், வடகிழக்கு தென்கிழக்கு வடமேற்கு தென்மேற்கு என்கிற நான்கு திசைமூலைகளும் சேர்ந்து எண்டிசைகள் என வழங்கப்படும். நமது விசிஷ்டாத்வைத வித்தாந்தத்தில் திக்கு என்று தனியே ஒரு பதார்த்தம் ஒப்புக்கொள்வதில்லை. இங்கே திசைகளைத் திருவயிற்றில் பெய்ததாகச் சொன்னது அவ்வவ்விடங்களிலுள்ள பொருள்களைச் சொன்னபடி. ….. (6)
English Translation
He took the eight Quarters, and the seven world, into his olden stomach, and lay sleeping on a fig leaf. He rid the waning Moon of his misery. He planted his claws into the mighty chest of Hiranya, coming as a ferocious lion with sharp white teeth. He lives in Tiruvenkatam, thitherward, O Heart!
