(1005)
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
பதவுரை
| குறுங்குடி |
– |
திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற |
| நெடு கடல் வண்ணா |
– |
பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே! |
|
நைமிசாரணியத்துள் எந்தாய்-; |
||
| கலியார் |
– |
கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர் |
| நலிக என்று |
– |
“இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி |
| என் மேல் |
– |
என் மேலே |
| ஐவர் ஏவினார் |
– |
பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்; |
| எங்ஙனே வாழும் ஆறு |
– |
அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;) |
| நான் |
– |
அடியேன் |
| கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் |
– |
குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்; |
|
(அதுதானெப்படிச் செய்தீரென்னில;) |
||
| என் நாவினால் |
– |
எனது நாவினாலே |
| பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு |
– |
நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு |
| உன் பாதமே பரவி |
– |
உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து |
| பணிந்து |
– |
கீழே விழுந்து |
|
உன் திருவடிவந்து அடைந்தேன்-; |
||
|
(ஆதலால் கலியை வென்றேனென்றபடி.) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
#1005
ஏவினார், கலியார் நலிக என்று என்மேல் – எங்ஙனே வாழும் ஆறு? – ஐவர் ;
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்,குறுங்குடி நெடுங் கடல் வண்ணா !
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு, உன் பாதமே பரவி, நான் பணிந்து, என்
நாவினால், வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-8]
ஏவினார் கலியார்-கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ; நான் இத்தனை நாளும் இருந்தபடியே இருந்தேனாகில் அவற்றால் மிகவும் துன்பப்பட்டிருப்பேன்; தைவாதீநமாக நான் பழைய நிலைமையில் நின்றும் நீங்கி உன் திருவடிகளில் புஷ்பங்களை ஸமர்ப்பித்தும் நமஸ்காரம் செய்தும் தோத்திரங்கள் பண்ணியும் வருகிறேனாகையால் இந்திரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்லவொண்ணாதபடி தடுத்துவிட்டேன்; கலி புருஷனுடைய கட்டளை பாறிப்பறந்து போயிற்று; அந்தக்கலி புருஷன் இனி இவ்வுலகில் வாழ்வதற்கே வழியில்லை – என்று திருவுள்ளமுவந்து அருளிச் செய்கிறாராயிற்று.
கலியார் = பெருமைப்படுத்திச் சொல்லுகிற வார்த்தையன்று; கோவமும் பகையும் இழிவுந்தோற்றச் சொல்லுகிறபடி. ”வினையார் ” என்று பாவங்களைச் சொல்வது போல. நலிக = வியங்கோள் வினைமுற்று. “எங்ஙனே வாழுமாறு என்பதற்கு இனி நான் எப்படி வாழ்வேன்’ என்று ஆழ்வார் இந்திரியங்களுக்கோ கலிபுருஷனுக்கோ அஞ்சி நடுங்கிச் சொல்லுகிறதாகப் பொருள் கூறுவர் சிலர் ; அது பிரகரணத்திற்குச் சேராது. “கோவினார் செய்யுங் கொடுமையை மடித்தேன்” என்று உடனே அருளிச் செய்கிறாராகையாலே, தாம் அஞ்சின தாகப் பொருள் கொள்ள வொண்ணாது. அந்தக் கலி புருஷன் இனி வாழ்வதற்கு வழி யுண்டோ ? என்பதாகவே கொள்க
English Translation
Kaliyar did set the five sense-organs on me saying go and torture him to the core. O Kurungudi Lord deep-as-the-ocean hue you defended me from the tyrants. Chanting and singing with so many flowers buds offering worship to your feet, O! Through my poems now, I have come to your feet Naimisaraniyam-living Lord, O1
