(1005)

(1005)

ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்

கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,

பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்

நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

பதவுரை

குறுங்குடி

திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா

பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்-;

கலியார்

கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று

“இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல்

என் மேலே
ஐவர் ஏவினார்

பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு

அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான்

அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்

குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;

(அதுதானெப்படிச் செய்தீரென்னில;)

என் நாவினால்

எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு

நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி

உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து

கீழே விழுந்து

உன் திருவடிவந்து  அடைந்தேன்-;

(ஆதலால் கலியை வென்றேனென்றபடி.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

#1005

ஏவினார், கலியார் நலிக என்று என்மேல் – எங்ஙனே வாழும் ஆறு? – ஐவர் ;

கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்,குறுங்குடி நெடுங் கடல் வண்ணா !

பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு, உன் பாதமே பரவி, நான் பணிந்து, என்

நாவினால், வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-8]

ஏவினார் கலியார்-கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ; நான் இத்தனை நாளும் இருந்தபடியே இருந்தேனாகில் அவற்றால் மிகவும் துன்பப்பட்டிருப்பேன்; தைவாதீநமாக நான் பழைய நிலைமையில் நின்றும் நீங்கி உன் திருவடிகளில் புஷ்பங்களை ஸமர்ப்பித்தும் நமஸ்காரம் செய்தும் தோத்திரங்கள் பண்ணியும் வருகிறேனாகையால் இந்திரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்லவொண்ணாதபடி தடுத்துவிட்டேன்; கலி புருஷனுடைய கட்டளை பாறிப்பறந்து போயிற்று; அந்தக்கலி புருஷன் இனி இவ்வுலகில் வாழ்வதற்கே வழியில்லை – என்று திருவுள்ளமுவந்து அருளிச் செய்கிறாராயிற்று.

கலியார் = பெருமைப்படுத்திச் சொல்லுகிற வார்த்தையன்று; கோவமும் பகையும் இழிவுந்தோற்றச் சொல்லுகிறபடி. ”வினையார் ” என்று பாவங்களைச் சொல்வது போல. நலிக = வியங்கோள் வினைமுற்று. “எங்ஙனே வாழுமாறு என்பதற்கு இனி நான் எப்படி வாழ்வேன்’ என்று ஆழ்வார் இந்திரியங்களுக்கோ கலிபுருஷனுக்கோ அஞ்சி நடுங்கிச் சொல்லுகிறதாகப் பொருள் கூறுவர் சிலர் ; அது பிரகரணத்திற்குச் சேராது. “கோவினார் செய்யுங் கொடுமையை மடித்தேன்” என்று உடனே அருளிச் செய்கிறாராகையாலே, தாம் அஞ்சின தாகப் பொருள் கொள்ள வொண்ணாது. அந்தக் கலி புருஷன் இனி வாழ்வதற்கு வழி யுண்டோ ? என்பதாகவே கொள்க

English Translation

Kaliyar did set the five sense-organs on me saying go and torture him to the core.  O Kurungudi Lord deep-as-the-ocean hue you defended me from the tyrants.  Chanting and singing with so many flowers buds offering worship to your feet, O! Through my poems now, I have come to your feet Naimisaraniyam-living Lord, O1

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top