(1003)
கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல்கிடந்தாய்!,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்!
பதவுரை
| பரமனே |
– |
புருஷோத்தமனே! |
| பாற்கடல் கிடந்தாய் |
– |
திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே! |
|
நைமிசாரணியத்து ளெந்தாய்!. |
||
| கோடிய மனத்தால் |
– |
கோணலான நெஞ்சோடே |
| சினம் தொழில் புரிந்து |
– |
பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து |
| நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு |
– |
நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து |
| ஓடியும் உழன்றும் |
– |
இங்குமங்கும் ஓடித்திரிந்தும் |
| உயிர்களே கொன்றேன் |
– |
பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய் |
| உணர்வு இலேன் நான் |
– |
விவேக சூந்யனாயிருந்த நான் |
|
நாடி உன் திருவடி வந்து அடைந்தேன் ஆதலால்-; |
||
| நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் |
– |
யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
#1003
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து, திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு,
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன், உணர்விலேன் ஆதலால் ; நமனார்
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் ; பரமனே! பாற்கடல் கிடந்தாய்!
நாடி நான் வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-6]
கோடியமனத்தால்- ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார். சினமாவது கோவம். கோவத்தினால் செய்யும் தொழிலாவது ஜீவஹிம்ஸை முதலியன . ”நாயினத்தொடும்” என்றவிடத்து, நாய் என்பதற்கு நாய் என்றே பொருள் கொண்டு, நாய் முதலிய கொடிய மிருகங்களைத் துணை கொண்டு வேட்டையாடி ஜீவஹிம்ஸைகளைப் பண்ணித்திரிந்தேன் என்பதாகக் கொள்வதுமுண்டு ; அன்றி, நாய் என்று – நாய் போன்ற நீசர்களைச் சொல்லிற்றாய், நீச ஸஹவாஸம் பண்ணித் திரிந்தேன் என்பதாகக் கொள்வதுமுண்டு. ஓடியுமுழன்றும் = பதின்காதவழி ஓடினால் ஒரு பிராணியைக் கொல்லலாம் என்று ஒருவன் சொன்னால் மயங்காமல் ஓடினேனென்கிறார் போலும். “உயிர்களே கொன்றேன்” என்றவிடத்து ஏகாரத்தினால் – துணிதுப்புகளைப் பிடுங்கிக்கொண்டு உதைத்துத் துரத்தி விடுதல் செய்கையின்றியே உயிர்க்கொலையளவுஞ் செய்தேன் என்று காட்டுகிறார். ”ஸர்வேச்வரனுண்டு, பரலோகமுண்டு” என்கிற துளி ஞானமில்லாமையினால் இவ்வளவுஞ் செய்தேனென்பார் உணர்விலேன் என்கிறார்.
“ஆதலால் நமனார்பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்” என்றவிடத் திற்கு இரண்டுவகையான யோஜநைகள் உண்டு. உயிர்களே கொன்றேனாய் உணர்விலேனான நான் வந்து உன் திருவடியடைந்தேனாதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்” என்று அந்வயித்து, இனி யமபுரத்தில் யமனுடைய ஆணை செல்லாதபடி அத்தை வென்றுவிட்டேன் என்பதாக ஒரு யோஜநை. “உணர்விலேனாதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்” என்று உள்ளபடியே அந்வயித்து, இப்படிப்பட்ட கொடிய பாவங்களை நான் செய்திருக்கிறபடியால்’ இப்போதிருக்கிற யமனால் இக்கலியனைத் தண்டிக்க முடியாது; இந்த யமபுரம் உபயோகமற்றது; இனி வேறு யமனும் வேறு யமபுரமும் ஏற்படுத்த வேணும்’ என்று சொல்லும்படி மஹாபாபியானேன் என்பதாகக் கொள்வது மற்றொரு யோஜநை.
English Translation
Bearing a crooked heart, doing things in anger, I did roam with hounds and enjoy it. Pursuing frightened creatures I killed them, without any thought for the poor ones! O Lord reclining in the mighty ocean, I have erased Yama-Dharma’s citadel. Searching myself well, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!
