(997)

(997)

தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை*

காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை*

ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள*

பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே!

பதவுரை

உலகத்து

இவ்வுலகத்திலே
அறிவு உடையார் ஆரார்

விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்)
அமரர் நல் நாடு அரசு ஆள

நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக
பேர்ஆயிரமும் ஓதுமின்கள்

(ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:
அன்றி

அல்லது,
கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன்

மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார்
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை

ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளி

யிருக்கு மெம்பெருமான் விஷயமாக

ஒலி செய்

அருளிச்செய்த
தமிழ்மாலை இவையே

தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே
பிதற்றுமின்

வாய்வந்தபடி சொல்லுங்கள்.

#997

தாரா ஆரும் வயல் சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*

காரார் புறவின் மங்கை வேந்தன் * கலியன் ஒலி செய் தமிழ்மாலை **

ஆரார் உலகத்து அறிவு அடையார்* அமரர் நல் நாட்டு அரசு ஆளப்*

பேர் ஆயிரமும் ஓதுமின்கள் * அன்றி இவையே பிதற்றுமினே* —(1-5-10)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *- (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். வானவர் நாடாகிய ஸ்ரீவைகுண்டத்தை ஸ்வாதீநமாக ஆள வேணுமென்னும் விருப்பமுடையீர் ! ஸஹஸ்ரநாமங்களை ஓதினீர்களாகில் உங்களுடைய விருப்பம் நிறைவேறும்; முரட்டு ஸம்ஸ்க்ருத பாஷையிலே அமைந்துள்ள அவற்றை உருச்சொல்லித் தரித்து ஓத வல்லமையில்லையேல் எளிதான செந்தமிழிலமைந்த இந்தப் பாசுரங்களை ஓதுங்கள்; பேற்றில் குறையில்லை என்றாராயிற்று.

“அன்றியிவையே ஓதுமினே” என்னாமல் பிதற்றுமினே என்றருளிச்செய்தமையால், “சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது” (முமுக்ஷுப்படி.) என்றாற்போலே இப்பாசுரங்களை வாயில்வந்தபடி தப்புந்தவறுமாகச் சொன்னாலும் அமையும் என்ற தாயிற்று. … … … (10)

அடிவரவு:- கலை கடம் உலவு ஊரான் அடுத்து தாய் ஏனோர் வெந்தார் தொண்டு தாரா வாணிலா .

ஐந்தாந்திருமொழி உரை முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சாணம்.

English Translation

The dark-cloud-flavored Mangai’s King Kaliyan has sung these songs on the Lord who resides in Saligrama, surrounded by fields with water birds. O Wise people of the world! If you wish to rule the world of the eternals, chant the thousand names of the Lord. Or else, sing these songs like mad.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top