(998)

(998)

வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே

பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,

ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை

நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்!

பதவுரை

நைமிசாரணியத்துள் எந்தாய்

நைமிசாரண்யத்தில்  எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன்

அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல்

ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல்

சிறிய நெற்றியையும்
பெரு தோள்

பெரிய தோளையும் உடையரான
மாதரார்

பெண்களினுடைய
வனம் முலையே

அழகிய முலைகளையே
பயன்

பரம புருஷார்த்தமாக
பேணினேன்

(நெடுநாள் வரை) ஆதரித்திருந்தேன்;
அதனை

அப்படி ஆதரித்திருந்த நிலைமையை
பிழை என கருதி

தப்பென்று நினைத்து
பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்

ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ண மில்லாதவனாகவே இருந்திட்டேன்;
எண்ணினேன்

ஸ்வரூபத்தை ஆராயத்தொடங்கினேன்;
எண்ணி

ஆராயவே,
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்

விசயாந்தர போகங்களைக் காறியுமிழ்ந்தேன்;
வந்து உன் திரு அடி அடைந்தேன்

இன்று உன் திருவடிகளை வந்து பணிந்தேன்.

ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

முதற்பத்து ஆறாந்திருமொழி.

ஆறாம் திருமொழி – வாணிலாமுறுவல்

(நைமிசாரணியம்)

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பண் : தக்கராகம், தாளம் : நடையொத்து

அவதாரிகை :-

ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில். பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.

சாஸ்த்ரங்களிற் செய்யவேண்டிய கருமங்களென்று விதிக்கப்பட்ட நற்கருமங்களைச் செய்யாதொழிகையும், செய்யலாகாதென்று மறுக்கப்பட்ட தீவினைகளைச் செய்கையும் என்று இருவகையாம் குற்றங்கள். அவ்விருவகைக் குற்றங்களும் தம்மிடத்தில் நிறைந்து கிடப்பனவாகச் சொல்லிக்கொள்ளுகிறார் இதில், ஸ்ரீ விபீஷணாழ்வான் கடற்கரையிலே இராமபிரானிடம் வந்து சரணாகதி செய்யும் போது ““రావడో నామ దువకృత్తః= ராவணோநாம துர்வ்ருத்த: “ [இராவணனென்று ஒரு துஷ்டன் உண்டு] என்று அடியே தொடங்கித் தன்னுடைய தாழ்வைச் சொல்லிக்கொண்டு அடைக்கலம் புகுந்ததை இங்கே நினைப்பது.

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் தங்களுடைய ஸ்ரீஸுக்திகளில் தங்களுடைய தோஷங்களை அடிக்கடி வெளியிட்டுக் கொள்ளுகிறார்களே, மாஞானிகன்று கொண்டாடப்படுகின்ற அவர்களுக்கும் தோஷங்கள் இருக்குமோ? என்று சிலர் கேட்பதுண்டு. இதற்குப் பலவகையான ஸமாதாநங்கள் சொல்வதுமுண்டு. ஒன்றான எம்பெருமான்தானும் இவ்விருள் தருமா ஞாலத்திலே வந்து திருவவதரித்தால் சோகம் மோஹம் முதலானவை அகில ஹேயப்ரத்யநீக கல்யாண குணஸாகரனான அப்பெருமானுக்கும் தோன்றுவதாக சாஸ்த்ரங்களிற் சொல்லுகிறபடியால் அதுபோல, மாஞானிகளான ஆழ்வாராசாரியர்களுக்கும் இந்தப் பிரகிருதி வாஸனையின் கொடுமையினால் சில தோஷங்கள் ஸம்பவிப்பதுண்டு ; ஸ்வல்பமான தோஷங்களை நைச்யாநுஸந்தாநரீதியிலே பெருக்கடித்துப் பேசுகிறார்கள் – என்று சிலர் நிர்வஹிப்பர்கள். ‘பகவத் ஸந்நிதியில் நம்முடைய தோஷங்களைச் சொல்லிக்கொள்ள வேண்டியது ஆவச்யகம் ‘ என்கிற சாஸ்த்ர மரியாதையைக் காட்டுவதற்காகவே பூருவர்கள் தோஷாநுஸந்தாநம் செய்து கொண்டனர் – என்று நிர்வஹிப்பர் சிலர். உண்மையில் மஹான்களான பூருவர்களுக்கு தோஷம் இருந்தனவா? இல்லையா? என்கிற விசாரம் நாம் பண்ண வேண்டியதே அநாவச்யகம் ; தோஷமே வடிவெடுத்த நமக்கு ஸ்வரூபாநுரூபமாக அநுஸந்திப்பதற்குப் பாங்கான பாசுரங்களை அருளிச் செய்து வைத்தார்களத்தனை – என்று கொள்வதே சிறக்கும்.

நைமிசாரணியமென்பது வடநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ஸ்ரீ புஷ்கர மென்கிற க்ஷேத்ரத்தில் எம்பெருமான் தீர்த்தரூபியாகவே ஸேவை ஸாதிப்பது போல ஸ்ரீ நைமிச க்ஷேத்ரத்தில் அரண்ய ரூபியாகவே ஸேவை ஸாதிக்கிறான் என்று பெரியோர் சொல்லுவர்கள். ஒரு காலத்தில் முனிவர்கள் பிரமனை நோக்கித் தவஞ் செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?. என்று தங்களுக்கு விளக்கிக் காட்டுமாறு வேண்ட, அப்போது அம்முனிவர்க்கு அப்பிரமதேவன் தான் ஒரு தர்ப்பத்தை ஆழியாகச் செய்து மண்ணுலகத்திலுருட்டி அது சென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால், அதற்கு இடமான இத்தலம் நைமிசமெனப் பெயர்பெற்றது. நைமிசம் – நேமி விழுந்த இடம். அரணியம் – காடு.

பிராட்டியை முன்னிட்டு சரணாகதி செய்வது ஸ்வரூபமாகையாலே இவரும் தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!…. திருவடி யடைந்தேன் ” என்று லக்ஷ்மீ ஸம்பந்தத்தை முன்னிட்டு ப்ரபத்தி பண்ணுகிறார் என்றுணர்க. ……. .

#998

வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந் தோள் மாதரார் வன முலைப் பயனே

பேணினேன் ; அதனைப் பிழை எனக் கருதி, பேதையேன் பிறவி நோய் அறுப்பான்,

ஏண் இலேன் இருந்தேன் ; எண்ணினேன் ; எண்ணி, இளையவர் கலவியின் திறத்தை

நாணினேன் ; வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-1]

* * * – [வாணிலாமுறுவல்.] எம்பெருமானே ! சாஸ்த்ரங்களில் விதிக் கப்பட்டுள்ள கருமங்களைக் குறையற அனுட்டித்து ஜிதேந்திரியர்களாய் என்னை அடிபணிய வேண்டும் என்று நீ சொல்லிவைத்திருக்கிறாய்; என்னுடைய நிலைமையோ அதற்கு நேர்மாறாக இராநின்றது. மாதர்களுடைய முறுவலழகையும் நெற்றியழகையும் தோளழகையும் முலையழகையும் வாய்வெருவிக்கொண்டு அந்த விஷயாநுபவமே நமக்குப் பரமபுருஷார்த்தமென்று கொண்டு நெடுநாள் வரையில் சபலனாய்த் திரிந்தேன். அப்படி திரிந்து கொண்டிருக்கவே இந்த ஸம்ஸார நோயைத் தீர்த்துக் கொள்வதற்கு வழி தேடாமலே யிருந்துவிட்டேன்; * ‘மாதரார் வனமுலைப்பயனே பேணிக் கொண்டிருக்கு மிருப்பு பிசகு’ என்று நெஞ்சில் பட்டாலன்றோ பிறவி நோயறுத்துக்கொள்ள எண்ணமுண்டாகும். இப்படியே நெடுநாள் கழிந்தவாறே “ஐயோ! நாமிருக்க வேண்டிய நிலைமை என்ன? இப்போது நாமிருக்கிற நிலைமை என்ன?” என்று சிறிது ஸ்வரூப ஸ்திதியை ஆராயத் தொடங்கினேன்; தொடங்கவே, நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷத்தால் விஷய போகங்களில் அருவருப்பு உண்டாயிற்று; அவற்றைக் காறியுமிழ்ந்து இன்று உன் திருவடிகளிலே வந்து சேரப்பெற்றேன் என்று நைமிசாரணியத்துளெந்தையை நோக்கி விண்ணப்பஞ் செய்தாராயிற்று.

வாள் நிலா முறுவல் = வாள் என்று ஒளிக்குப் பெயர் ; ஒளி நிலாவுகின்ற முறுவல் என்க. ஒளி வீசுகின்ற நிலாப்போன்ற முறுவல் என்றுரைப்பாருமுண்டு. சிறுநுதல் = நெற்றி சிறிதாயிருந்தால் அவலக்ஷணமாயிராதோவென்று சிலர் நினைப்பதுண்டு ; அங்ஙனல்ல ; மாதர்களின் அவயவலக்ஷணம் வருணிக்கு மிடத்து [கலித்தொகை 108,] ”நகிலந்தோள் கண்ணென மூவழிப் பெருகி” [முலை தோள் கண் இம்மூன்று அவயவங்களும் பெரிதாயிருக்கை அழகு] என்றும், “நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி” [நெற்றி பாதம் இடை என்ற மூன்று அவயவங்களிலும் சிறுத்திருக்கை அழகு] என்றும் சொல்லியிருப்பதால் அழகு குன்றாத சிறுமை நெற்றிக்கு ஸுலக்ஷணமே யென்க. ”நெற்றி சிறுத் திருக்கையில்லையாகில் பும்ஸ்த்வகந்தியாயிருக்குமிறே” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தியும் நோக்குக.

பெருந்தோள் = அநுபவிப்பவர்களினுடைய ஆசையினும் விஞ்சிக் கரை புரண்ட தோள் என்க. விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பகவத் விஷயத்திலே வந்து சேர்ந்த ஆழ்வார் ஹேயமான அவ்விஷயங்களைப் பற்றி வாணிலா முறுவலென்றும் சிறுநுதலென்றும் பெருந்தோளென்றும் வனமுலையென்றும் வருணித்துப் பேசுவது ஏதுக்காக? என்று கேட்கக்கூடும்; இதற்கு நம் ஆசார்யர்கள் அருளிச் செய்வதாவது:- உலகத்தில் வாக்குப் படைத்தவர்கள் பலவகைப்படுவர்; சிலர் உள்ளதை உள்ளபடியே பேசுவர்கள்; சிலர் சிறந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் தொடங்கினாலும் தங்களுடைய வாக்கின் திறமை போராமையினால் குறைப்படப் பேசுவர்கள்; சிலர் நாவீறுடைமையினால் அற்ப விஷயங்களையும் கனக்கப் பேசுவர்கள் ; இப்படி பேச்சில் பலவகைகளுண்டு. பேசுகிறவர்களின் வாக்கின் போக்கை அநுஸரித்து விஷயங்கள் சிறுத்துப்போவதும் பெருத்துப்போவதுமுண்டு. திருமங்கையாழ்வாருடைய நாவீறு லோகவிலக்ஷணமாகையால் அற்ப விஷயங்களைப் பற்றிப் பேசும்போதும் பெருக்காறு பெருகுமாபோலே யிருக்குமேயன்றி அவ்விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்திராது இவருடைய சொற்போக்கு. ஆகவே, விஷயங்கள் அற்பமென்பதில் தடையில்லை ; இவருடைய வாக்கு கம்பீரமாகையால் அற்ப விஷயத்தை யும் கனக்கப் பேசுகின்றது. என்று நம் ஆசிரியர்கள் அருளிச் செய்வர்கள். மேல் ஆறாம்பத்தில் “துறப்பேனல்லேன்” என்னுந் திருமொழியில் “சாந்தேந்துமென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத் தாழ்ந்தேன்” என்ற நான்காம் பாட்டின் வியாக்கியானத்தில் இக்கருத்துப்படப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ளமை காண்க.

பயனே என்ற விடத்திலுள்ள ஏகாரத்தைப் பிரித்து முலையோடு கூட்டி ”வனமுலையே பயன் பேணினேன்” என்றுரைக்கப்பட்டது. “அதனைப் பிழையெனக் கருதிப் பிறவி நோயறுப்பானேணிலேன்” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். ” நான் கோவிலுக்குப் போய்ப் பெருமாளை ஸேவிக்க வில்லை” என்றால், நான் கோவிலுக்கும் போகவில்லை, பெருமாளையும் ஸேவிக்க வில்லை’ என்றும் பொருள்படும் ; ‘நான் கோவிலுக்குப் போயிருந்தும் பெருமாளை ஸேவியாமல் வந்து விட்டேன்’ என்றும் பொருள்படும். அதுபோல இங்கும் நான் விஷய போகங்களைப் பிழையெனக் கருதவுமில்லை; பிறவி நோயறுக்க எண்ணமும் கொள்ளவில்லை; இப்படியே நெடுநாளிருந்துவிட்டேன்’ என்கிற ஒரு பொருளும், “விஷயபோகங்களைப் பிழையெனக் கருதிய பின்பும் நடுவில் சிலநாள் பிறவி நோயறுக்க வழிதேடாமலே யிருந்துவிட்டேன்” என்கிற ஒரு பொருளும், ஆக இருவகையான பொருள்கள் இங்கே கொள்ள இடமுண்டு .

ஒருவன் செய்கிற காரியம் உண்மையில் கெட்டதாயிருந்தாலும் சாஸ்த்ரங்களில் நம்பிக்கைக் குறையினால் புண்யபாபவிபாகமே பொய், எல்லாம் நன்று தான்’ என்கிற பிடிவாதத்தினால் கெட்ட காரியத்தையும் நல்ல காரியமென்றே நினைத்துக்கொண்டு செய்வதுண்டு; போகப்போக சாஸ்த்ரங்களில் நம்பிக்கை பிறந்து நாம் செய்வது கெட்ட காரியந்தான்’ என்று நெஞ்சிற்பட்டாலும் அக்காரியத்தை விரைவில்விட முடிகிறதில்லை; பகவத்கடாக்ஷம் பரிபக்குவமாக ஆகிறபோது தான் அவ்விழிதொழிலைவிட்டொழித்துப் பிறவிநோயறுக்க எண்ணமுண்டாகும். இதைத்தான் இங்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் – ; நான் நெடுநாள் வரையில் சாஸ்த்ரங்களில் நம்பிக்கை யென்பதேயில்லாமல், விஷயாநுபவத்திற்கு மேற்பட்ட புருஷார்த்தமே உலகில் கிடையாது என்று அத்யவஸாயங்கொண்டு அதில் ஆழ்ந்து கிடந்தேன்; அதற்குப் பிறகு சாஸ்த்ர விச்வாஸமுண்டாகி ‘விஷய போகம் பிசகு’ என்கிற புத்தி மாத்திரம் பிறந்தது; ஆனால் அதை விட்டொழித்து நல்வழி போகப்பெற்றிலேன் ; அந்த இரண்டு அவஸ்தைகளையும் நீங்கி இன்று விஷய போகங்களைக் காறியுமிழ்ந்து பிறவி நோயறுக்கும் வழியிலே வந்து நின்றேன் என்றாராயிற்று . ….. ….. ….. ….. …. …. (க.)

English Translation

Mon-beam-like laughter, little-forehead slender-arms, beautiful breasts had beckoned me. Running after all this, I then saw the wrong I did, shamefully came to you for redemption. I had never thought of you, now I got to think of you, –memory of lurid dames receding, –Filled with remorse I came to your holy feet, Naimisaraniyam-living Lord, O!.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top