(980)
இலங்கையும்கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடியெனவிரிந்து,
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
முன் |
– |
ஸ்ரீராமாவதாரத்தில் |
|
இலங்கையும் |
– |
லங்காபுரியென்ன |
|
கடலும் |
– |
(அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன |
|
அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும் |
– |
ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன |
|
அரக்கர் குலங்களும் கெட |
– |
ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக |
|
கொடுதொழில் புரிந்த கொற்றவன் |
– |
கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்) |
|
கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி |
– |
ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி |
|
மேல் நின்ற விசும்பில் |
– |
மேலேயிருக்கிற ஆகாசத்திலே |
|
வெண் கொடி துகில் என விரிந்து |
– |
வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து |
|
வலந்தரும் |
– |
(வேகத்தாலே) மிடுக்கையுடையதும் |
|
மணி நீர் |
– |
அழகிய தீர்த்தத்தை யுடையதுமான |
|
கங்கையின் |
– |
கங்கைநதியினுடைய |
|
கரை மேல் |
– |
கரையின்மேலுள்ள |
|
வதரியாச்சிராமத்து |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே |
|
உள்ளான் |
– |
எழுந்தருளியிருப்பவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
இலங்கையும்கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும் * அரக்கர் குலங்களும் கெடமுன்கொடுந்தொழில்புரிந்த கொற்றவன், கொழுஞ்சுடர்சுழன்ற *
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடியெனவிரிந்து * வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
***:- (இலங்கையுங் கடலும்) ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம். இலங்கையும் இராவணனும் அரக்கர் குலங்களும் கெட்டது உண்மை; கடல் கெடவில்லையே; “கடலும் கெட” என்று இங்கே அருளிச்செய்தது என்? என்னில்; கடலரசனை நோக்கி ‘இலங்கைக்குச் செல்ல வழிவிட வேணும்’ என்று சரணாகதி பண்ணி வேண்டின் போது அவன் அஹங்கரித்திருக்கவே “***”–ஸாகரம் சோஷயிஷ்யாமி = கடலைவற்றச் செய்துவிடுகிறேன்” என்று சீறிச்சிவந்த கண்ணினனாய் அம்புதொடுத்தனனாதலால் “கடல்கெடக் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் ” என்னக்குறையில்லை யென்க. கடலிடையே அணைகட்டின அருந்தொழி லைக் கூறியவாறுமாம்.
அடலருந்துப்பின் இருநிதிக்கிறைவன் = துப்பு –ஸாமர்த்தியம்; வர பலத்தாலும் புஜபலத்தாலும்’ எனக்காரும் நிகரில்லை’ என்று செருக்குற்றுத் திரிந்தவன் என்று கருத்து. குபேரனிடமிருந்த சங்கநிதி பத்மநிதிகளை இராவணன் கவர்ந்து கொண்டதுபற்றி இருநிதிக்கிறைவனாயினன்.
இப்படிப்பட்ட ராவணாதிகளை அழித்தவனான பெருமான். எழுந்தருளியி ருக்குமிடமாகிய வதரியாச்சிரமம் கங்கையின் கரைமேலுள்ளது; அக்கங்கை எப்படிப்பட்டதென்னில்; கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலி லுரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண்துகிற் கொடியென விரிந்து வலந்தரு மணிநீருடையது ; (அதாவது)- கொழுஞ்சுடர் என்று ஸுர்யனைச் சொல்லுகிறது; விலங்கல் என்று மலைக்குப் பெயர்; கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலாவது மேருமலை; மேரு பர்வதத்தைச் சுற்றித்திரிவானிறே ஸூர்யன். (ஸ்ரீவிஷ்ணுபுராணம் இரண்டாவது அம்சத்தில் எட்டாவது அத்தியாயம் நோக்கத்தக்கது.) அந்த மேருமலை தேவலோகத்தை அளாவியிருப்பதனாலும், ” ***”- மேரு ப்ருஷ்டே பதித்வோச்சை ‘நிஷ்க்ராந்தா சசிமண்டலாத்-ஜகத: பாவநார்த்தாய யா ப்ரயாதி சதுர்த்திசம்.” என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (2-8-112.) சொல்லியிருப்பதனாலும் “கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலிலுரிஞ்சி ” எனப்பட்டது.
மேல்நின்ற விசும்பில் வெண்துகில்கொடியென விரிந்து = வெண்ணிறமான கங்கை நீர் விசும்பின்மீது ப்ரவஹிப்பதைப் பார்த்தால்-மாடமாளிகைகளின் உச்சியில் நாட்டப்படுகிற தவஜங்களில் கட்டப்பட்டுள்ள வெளுத்த துணிகள் காற்றில் அசைந்து பரம்புவது போலிருக்கின்றதென்று உத்ப்ரேக்ஷிக்கிற படி. … . …. … … … … … … (ங)
English Translation
The victorious Lord fought a fierce battle and bound the sea, destroyed Lanka, killed the mighty Ravana and routed his army. He resides by the crystal-pure waters, in Vadari-Ashrama. The Sun gets ensnared in the tall hills, and like a fluttering white pennon announcing His victory, the Ganga flows from the sky.
