(973)
எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம்*
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன்*
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த*
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே.
பதவுரை
|
எய்த்த சொல்லோடு |
– |
பலஹீனமான பேச்சுடனே |
|
ஈளை ஏங்கி |
– |
கோழைவந்து தங்கப் பெற்று |
|
இருமி |
– |
இருமி |
|
உடலம் இளைத்து |
– |
சரீரம் மெலிந்து |
|
பித்தர் போல |
– |
பைத்தியம்பிடித்தவர்கள்போல |
|
வேறு சித்தம் ஆய் பேசி |
– |
விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி |
|
அயரா முன் |
– |
தளருவதற்கு முன்னே-, |
|
அத்தன் |
– |
ஸர்வஸ்வாமியாய் |
|
எந்தை |
– |
எமக்குத் தந்தையாய் |
|
ஆதிமூர்த்தி |
– |
உலகத்திற்கு மூலக்கடவுளாய் |
|
ஆழ் கடலை கடைந்த |
– |
(ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய் |
|
மைத்த ஜோதி |
– |
மைபோல் சாமமான புகரையுடையனான |
|
எம்பெருமான் |
– |
எம்பெருமானுடையதான |
|
வதரி வணங்குதும் |
– |
ஸ்ரீபதரியை வணங்குவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
எய்த்தசொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம் *
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன் *
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த *
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே.
***-(எய்த்த சொல்லோடு.) கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும். அவ்வள விலும் வாயை மூடிக்கொண்டு வெறுமனிருக்கமாட்டார்களாகையால் பைத் தியம் பிடித்தவர்கள் போல் சித்தம் ஸ்வாதீனமல்லாமல் எதையாவது தத்தக பித்தகவென்று பேசுவார்கள்; அந்தப் பேச்சும் பொறாமல் ஆயாஸம் அதிகரித்து விடும். அப்படிப்பட்ட நிலைமையில் நாமெங்கே? வதரி யெங்கே? நெஞ்சால் நினைக்கத்தான் முடியுமோ ? ஆகையாலே இப்போதே வதரியை வணங்குவோம் என்றாராயிற்று.
அத்தன் என்பதனால், பொதுப்படையாக உலகத்துக்கெல்லாம் ‘ஸ்வாமி என்பதும், எந்தை என்பதனால், விசேஷித்துத் தமது ஸ்வாமி என்பதும் சொல்லப்பட்டதாம்.
ஆழ்கடலைக் கடைந்தது கூர்மாவதாரத்தில். அந்த வரலாற்றை மேலே கூர்மாவதாரப்ரஸங்கம் வருமிடத்து வரைவோம். ….. …. …. (சு)
English Translation
Feeble words mixed with phlegm come slowly, cough makes the body weak, mumbling incoherently like mad men; ‘ere that happens, -the dark radiant Lord, the first cause Lord, my father, churned the deep ocean, — Worship Him in Vadari.
