(966)

(966)

ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,

ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை இருந்தநல்லிமயத்து,

தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,

பேதைவண்டுகளெரியெனவெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே.

 

பதவுரை

ஆயிரம் நாமங்கள்

ஸஹஸ்ர நாமங்களை

ஓதி

எப்போதும் சொல்லிக் கொண்டு

உணர்ந்தவர்க்கு

(அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு

உறுதுயர்அடையாமல்

உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும்

ஏதம் இன்றி

பாவமொன்றும் இல்லாதபடியாகவும்

நின்று அருளும்

எப்போதும் க்ருபை செய்கின்ற

நம் பெருந்தகை

நம் ஸ்வாமியானவன்

இருந்த

எழுந்தருளி யிருக்குமிடமான

நல் இமயத்து

நல்ல இமயமலையின் கண்–,

தாது மல்கிய

தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான

பிண்டி

அசோக மலர்கள்

விண்டு அலர்கின்ற

விரிந்து அலருகிற

தழல்புரை எழில்

நெருப்புப் போன்ற அழகை

பேதை வண்டுகள் நோக்கி

அறிவில்லாத வண்டுகள் பார்த்து

எரி என

நெருப்பென்று நினைத்து

வெருவரு

பயப்படுமிடமான

பிரிதி

திருப்பிரிதியை

நெஞ்சே! சென்று அடை-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

ஓதி யாயிரநாமங்க ளுணர்ந்தவர்க்கு உறுதுய ரடையாமல் *

ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை இருந்த நலிமயத்து *

தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரையெழில் நோக்கி*

பேதை வண்டுகளெரியென வெருவரு பிரிதி சென்றடை நெஞ்சே!

***-. [ஓதியாயிரம்.) ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேரர் தபடியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண்.

தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!.

இங்ஙனே வண்டுகளின் அஞ்சுதலைக் சொன்னவித்தால் நினைவுக்கு வரக்கூடியதொன்றுண்டு;- ‘ எம்பெருமான் ஸர்வரக்ஷகன் ‘ என்பது தெரிந்திருக்கச் செய்தேயும் ‘ஆராலே இவனுக்கு என்ன தீங்கு வந்து விடுமோ!’ என்று அஞ்சி, பல்லாண்டு பல்லாண்டென்று அவனுக்கு மங்காளாசாஸநம் பண்ணுவாரும், மற்றொருகால் அந்த அச்சம் நீங்கி ‘எம்மை ரக்ஷித்தருள வேணும்’ என்று பிரார்த்திப்பாரும், மீண்டும் பழைய அச்சமே தலையெடுத்து மங்களாசாஸநம் பண்ணுவாருமாய் ஆகவிப்படி பயமும் பயநிவ்ருத்தியும் மாறிமாறிச் செல்லுகிற ப்ரபந்நர்கள் வாழுமிடம் திருப்பிரிதி என்றதாகிறது.

இரண்டாமடியில் ஏதமின்றி என்ற பாடத்திற்காட்டிலும் ஏதுமின்றி என்ற பாடம் சிறக்கு மென்பது பெரியோர்களின் கொள்கை ; ஏதும் இன்றி – ஹேது ஒன்று மில்லாமல் ; நிர்ஹேதுகமாக என்கை. பிண்டி- அசோகமரம். (க)


English Translation

Chanting thousand names, realization dawned good-souls, saved from the pall of despair; Find a source of many graces in the benevolent Resident of Himavan peaks. Pollen-spilling red Ashoka trees blossom with the hue of the radiant Sun. Foolish bumble trees mistake them for fire and flee in Piriti, — O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top