(965)

(965)

இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை இரும்பசியதுகூர,

அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய அருவரையிமயத்து,

பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,

பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.

 

பதவுரை

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை

இராப்பொழுதே விஞ்சி இருள் அதிகரி க்கப்பெற்ற மலை முழஞ்சுகளிலே

இரு பசியது கூர

பெரும்பசி உண்டாக

அரவம்

மலைப்பாம்புகளானவை

ஆவிக்கும்

பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிற

அகம் பொழில் தழுவிய

உட்சோலைகளோடு கூடிய

அரு வரை இமயத்து

ஏறமுடியாத தாழ்வரையையுடைய இமயமலையின் கண்,

இமையோர்கள்

தேவர்கள்

பிரமனோடு சென்று

நான்முகனோடு கூடச் சென்று

பரமன் என்று எண்ணி நின்று –

பரமபுருஷனே! என்றும்

ஆதி என்று

ஆதி மூலமே ! என்றும்

எம் பனிமுகில் வண்ணன் என்று

குளிர்ந்த மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானே! என்றும்

எண்ணி நின்று

அநுஸந்தித்துக் கொண்டு

அடி தொழும் பெரு தகை

திருவடிகளை வணங்குதற்குரிய

பிரிதி

பெருந்தன்மை

பொருந்திய

திருப்பிரிதியை

நெஞ்சே! சென்று அடை-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

இரவுகூர்ந் திருள்பெருகிய வரைமுழை இரும்பசி யதுகூர *

அரவமாவிக்கு மகம்பொழில் தழுவிய அருவரை யிமயத்து*

பரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள் *

பிரமனோடு சென்றடி தொழும் பெருந்தகைப் பிரிதி சென்றடை நெஞ்சே!


* * * * (இரவு கூர்ந்து.) இமயமலையில் சோலைகள் செறிந்து கிடக்குமாதலால் ‘ இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா” என்னுமாபோலே பகற்போது காணமுடியாமல் இரவு காலமே விஞ்சி எங்கும் இருள் மூடிக்கிடக்கும்.

அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குஹைகளிலே பாம்புகளானவை ஆஹாரம் பெறாமல் பெரும்பசியோடே பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையின்கண். அமரர்கள் வந்து சேர்ந்து ‘பரமபுருஷா!, ஸகல ஜகத்காரண பூதா!!, காளமேகச்யாமளா!!!” என்றிப்படி அநுஸந்தித்துக்கொண்டு நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்குமிடமாகிய திருப்பிரிதி யைச் சென்று சேர் நெஞ்சே!.

அரவம் ஆவிக்கும் அகம்பொழில் என்பதற்கு- பாம்புகளானவை சோலையின் பரிமளத்தோடே கூடின காற்றை ஆக்ராணித்துத் தரிக்கு மென்றும் உரையிடலாம். பரமன் ஆதி முகில்வண்ணன் என்கிறவிவற்றை முதல் வேற்றுமையாகவும் அண்மைவிளிகளாகவுங் கொள்ளலாம். … … (அ.) .


English Translation

Dark-as-moonless-night caverns in the mountains harbor hungry and winding snakes, gaping wide above the mountain bowers hiding with the Resident of Himavan peaks. Gods in hordes with Brahma gather in the worship of the Lord in the high mountains, chanting names like O-the-Primeval Lord, clod-hued Lord, in Piriti, — O, Go to, my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top