(913)

(913)

பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்

இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்

தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க

வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.

பதவுரை

மதில் திருவரங்கத்தானே!-;

ஒழுகல் ஆறு

–

பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில்
பழுது இலா

–

ஒருகுற்றமு மற்றிருக்குமவர்களாய்
பல சதுப்பேதிமார்கள்

–

நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே!
எம் அடியார்கள் ஆகில்

–

“நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்)
இழி குலத்தவர்களேனும்

–

தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும்
நீர்

–

நீங்கள்
தொழுமின்

–

(அவர்களைத்) தொழுங்கள்;
கொடுமின்

–

(உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்;
கொள்மின்

–

(அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று

–

என்று உபதேசித்தருளி
நின்னோடும் ஒக்க

–

உனக்கு ஸமமாக
வழிபட

–

அவர்களை ஆராதிக்கும்படி
அருளினாய்

–

உரைத்தருளினாய்

(போல்-அசை).

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;- ‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகிவருகிற வம்சப்ரவாஹத்திலே பிறந்து சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது; எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்; பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக்கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்?  என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே “பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி “தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக.

ஆசார்யஹ்ருதயத்தில் -“ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்”, என்னும் ஸ்ரீஸூக்தியும் அதன் வ்யாக்யாந ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக்கடவன.

English Translation

Faultless well-bred ones, well versed in the four Vedas, — even if born in poor families, — if they are your devotees, you treat them on par with yourself, worthy of worship, saying, “Revere them, give them, take to them.” O Lord of walled Arangama-nagar!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top