(860)

(860)

சுருக்குவாரை யின்றியேசு ருங்கினாய்சு ருங்கியும்

பெருக்குவாரை யின்றியேபெ ருக்கமெய்து பெற்றியோய்

செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்ததேவ தேவனென்று

இருக்குவாய்மு னிக்கணங்க ளேத்தயானு மேத்தினேன்.

பதவுரை

சுருங்குவாரை இன்றியே

சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே
சுருங்கினாய்

(ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே!
சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே

அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல்
பெருக்கம் எய்து

(த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய்

பெற்ற பெருமானே
செருக்குவார்கள்

அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள்

அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த

தொலைத்தருளின

தேவதேவன்! தேவாதிதேவனே!

என்று

இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு
இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த

வேதமோதும் வாயையுடையரான  மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு)
யானும் ஏத்தினேன்

அடியேனும் துதித்தனித்தனை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே! உன்னுடைய வடிவழகு, திருக்கல்யாணகுணங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலியவற்றைப்பற்றி நான் பேசுவதெல்லாம் நானாகவே கண்டறிந்து பேசுவதல்ல, சிற்றறிவினனாகிய எனக்கு ஒன்றும் தெரியாது. வைதீக புருஷர்கள் ஸ்தோத்ரம் பண்ண ககண்டு காணும், அநுவாதரூபமாக ஏதோ பேசினே னுத்தனை என்று ஸநச்யானுஸந்தாநம் பணிக்கொள்ளுகிறார். “எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கு மென்னும் அப்படியானுஞ் சொன்னேன், அடியேன் மாற்றியாதென்பனே” (திருவிருத்தம்) “இரைத்து நல்ல மேன்மக்களேத்த யானுமேத்தினேன்” (திருவாய்மொழி.) என்ற நம்மாழ்வாரருளிச் செயல்களுங் காண்க.

English Translation

Without a means of growing small you shrunk yourself to manikin. Without a means of growing tall, you blew yourself beyond the world. The evil of oppressors all, – you rid the world, O Lord of gods. Since Vedic seers are full of praise, I too did sing in praise of you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top