(861)
தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய்
மாயநின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்
நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப்
பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை கண்ணனே.
பதவுரை
| கரும்பு உலாவு |
– |
வண்டுகள் உலாவப்பெற்ற |
| தண் துழாய் |
– |
குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய |
| மாய! |
– |
ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே! |
| நாயினேன் |
– |
நீசனான அடியேன் |
| தூயனாயும் |
– |
பரிசுத்தனாகவோ |
| அன்றியும் |
– |
பரிசுத்தனல்லாதவனாகவோ |
| நின்னை |
– |
தேவரீரை |
| வணங்கி |
– |
ஸேவித்து |
| வேலை நீர் பாயலோடு |
– |
திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட |
| பக்தர் சித்தர் |
– |
பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே |
| மேய |
– |
குடியிருக்கின்ற |
| வேலைவண்ணனே! |
– |
கடல்வண்ணனே! |
| வாழ்த்தும் இது எலாம் |
– |
துதிப்பதாகிற இதனையெல்லாம் |
| நீயும் |
– |
(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும் |
| நின் குறிப்பினில் பொறுத்து |
– |
திருவுள்ளத்திலே க்ஷமித்திருள் |
| நல்கு |
|
அநுக்ரஹம் செய்ய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பசுசுத்ததென்னலாம்; மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;- தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்; அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்; சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.
English Translation
O Lord who wears a Tulasi wreath, O Lord of hue like ocean-deep! O Lord who lies in Ocean and the hearts of all the serving meek! O Lord the service, good or bad, by lowly-self this dog-begone, –pray take a note through gaze of love for those who seek your feet alone
