(859)

(859)

கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்

நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்

வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோகு றிப்பிலே.

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன்

–

அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன்

–

எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட

–

நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது

–

எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு

–

ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும்

–

அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

–

மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ

–

மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில் அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்; அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில். நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்; நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது. இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.

English Translation

The world of wealthy Brahma or the wiped-out world of Lord Siva, the kingdom of the thousand eyes that Indra rules in sky above, — If all this and the joy of  life in free Heaven he granted me, I still will crave for thee alone, — my only aim, to be with you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top