(850)

(850)

காட்டிநான்டிசய்வல்வினைப் பயன்றனில்மனந்தனை*

நாட்டிவைத்துநல்லவல்ல செய்யவெண்ணினாரென*

கேட்டதன்றியென்னதாவி பின்னைகேள்வநின்னொடும்*

பூட்டிவைத்தவென்னை நின்னுள்நீக்கல்பூவை வண்ணனே.

பதவுரை

பூவை வண்ணனே

–

காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!
பின்னைகேள்வ!

–

!  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே
(யமகிங்கர ரானவர்கள்)

நான் செய் வல்வினை காட்டி

–

நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி
பயன் தனில்

–

அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை

–

எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து

–

துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல

–

அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார்

–

செய்ய நினைத்திருக்கிறார்கள்
என கேட்டது அன்றி

–

என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக
உன்னது ஆவி

–

என்னுடைய ஆத்மாவை
நின்னொடும் பூட்டிவைத்த என்னை

–

உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  நான் கணக்கு வழக்கில்லாதபடி செய்திருக்கும் பாவங்களுக்குப் பலன் அனுபவித்தே தீரவேண்டியதாகும்; நான் செய்த பாவங்கள் இவ்வுலகத்தில் அந்தந்த க்ஷணங்களில் அழிந்துபோய்விட்டாலும் அவற்றை நான் மறந்தொழிந்தாலும் பாபபலன்களை ஊட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள யமகிங்கரர்கள் என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் எடுத்தெடுத்துக்கூறி ‘இவற்றின் பலனை அநுபவித்தே தீரவேணும்’ என்று வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களென்பதை நான் பெரியோர் முகமாகவும், சாஸ்திரமுகமாகவும் கேட்டிருக்கிறேன்; அப்படிப்பட்ட பயங்கராமன யமகிங்கரயாதனைகள் அடியேனுக்கு நேரக்கூடாதென்று ஏற்கனவே தேவரீர்பக்கல் ஆத்மஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறேன்; இவ்வடியேனை அந்த ரங்கபூதனாக தேவரீர் திருவுள்ளத்தில் கூட்டிக்கொண்டருளினால் *** என்றபடி அந்த நரகவேதனைகட்கு ஆளாகதொழியலாம்; ஆகையாலே தேவரீர் அடியேனை அவிநாபூதனாகக் கொண்டருள வேணும் என்று பிரார்த்திகிறார்.

செய்யவெண்ணினார் என்ற வினைமுற்றுக்கு ஏற்ப “நமன் தீமர்” என்ற எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும். என்றைக்கோ செய்து முடிந்துபோன வல்வினைகளைக் காட்டுவதாவது- நினைப்பூட்டுகை; இன்ன இன்ன பாவங்களைச் செய்தாயென்று தெரிவித்தல் “பயன்றனால்” என்பதும் சிலருடைய பாடம். பயன்றனில் மனந்தனை நாட்டி வைக்கயாவது – பிறரை வஞ்சித்து ஏகாந்தாமகப் பாவங்களைச் செய்து தீர்த்தோம்; அவற்றின் பலன்களை இப்போது அநுபவித்தே தீர வேண்டும்; இப்போது யமபடர்களை வஞ்சிக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ளுகை. யமபடர் செய்யக்கூடிய ஹிம்ஸைகளின் கொடுமையை நினைத்து இன்ன ஹிம்ஸையென்று சொல்ல அஞ்சி கல்லவல்ல என்று பொதுவிலே அருளிச்செய்கிறார்: நல்லதாகாத செயல்களையென்கிறார்.

English Translation

O Lord of Kaya blossom-hue and spouse of Lady Nappinnai! By grace of showing me self, you made my heart to come to you. The things I heard the Lord of Death will do to damage me are wrong, for you do hold me in your heart, I pray you do not leave me now.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top