(768)

(768)

ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்

போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில்

மூர்த்தியாய் நாகமூர்த்தி சயனமாய்ந லங்கடல்கி டந்துமேல்

ஆகமூர்த்தி யாயவண்ண மெங்கொலாதி தேவனே.

பதவுரை

ஆதி தேவனே

–

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏகமூர்த்தி ஆய்

–

(பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

–

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

–

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

–

ப்ரதாகம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

–

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

–

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

–

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

–

நல்ல திருப்பாற்கடலில்
காகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

–

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

–

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

–

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

–

என்னாயிருந்தது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும், வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க, அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வஸஹிஸ்ணுவாய் ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று அது தன்னிலே உள்குழைகின்றார்.

“மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல் இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி. (கஎ)

English Translation

O Single-form, the Three-fold form, the Four-fold form, benevolent! The joyous form, the holy form, the countless forms, O First causes Lord! The serpent form in foaming seas is couch for you to lay and be. The way you come for all to see as forms in temples, Glory-be!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top