(763)

(763)

உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்திமீண்

டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்

உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்

உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே


பதவுரை

உலகு தன்னை

லோகங்களை
நீ படைத்தி

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

அதுமன்றியில்
உலகு தன்னே

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

அறியவல்லாரார்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஜகத்காரணபூதனாய்நின்று நோக்குமளவே யன்றிக்கே அஸாதாரண விக்ரஹத் தோடுங் குடிவந்தவதரித்து நோக்குகின்ற உன்படிகளை அறியவல்லார் ஆருமில்லை யென்கிறார்.

நான்காமடியை, சூழல் உள்ள நின்னை  உலகில் யாவருள்ளவல்லர்” என மாற்றி அந்வயித்துக்கொள்க. ஆச்சர்யமான படிகளையுடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறியவல்லார் ஆருமில்லை யென்க. இனி, நின்னை என்பதற்கு ‘உன்னிடத்திலே’ என்று பொருள்கொண்டு உன்னிடத்திலே உள்ள சூழலை ஆர் அறியவல்லார்? என்னவுமாம். படைத்தி-, வைத்தி, பிறத்தி, நிற்றி= இவை முன்னிலை யொருமை வினை முற்றுக்கள்.

English Translation

You created all the worlds, then you did swallow all the worlds. Then you did permeate the worlds without a place of exception. Now all the worlds are borne in you, yet you remain aloof of them. The way you hold the worlds around, who can contemplate this all?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top