(727)

(727)

தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்

வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே

களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே

இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ

பதவுரை

தளை அவிழும் நறுகுஞ்சி

–

கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியையுடையனான
தயரதன் தன்

–

தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய்

–

சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய

–

ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால்

–

அந்த வில்லாலே

மதிள் இலங்கை அழித்தவனே

களை கழுநீர்

–

களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து

–

சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற

என் கருமணியே

இளையவர்கட்கு

–

இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய்

–

கருணை பொருந்தியவனே!

இராகவனே! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள்புரிந்தான்; இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள்புரிந்தான் என்றிறே பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.

English Translation

Sleep, O Raghava, benevolent to younger brothers, Talelo! My Dark gem-Lord of Kannapuram where red water-lilies grow everywhere in thickets. Your dark fragrant coiffure keeps slipping. You are the emancipator of Dasaratha’s lineage. You destroyed the fortified Lanka city wielding a matchless bow.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top