(727)
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ
பதவுரை
| தளை அவிழும் நறுகுஞ்சி |
– |
கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியையுடையனான |
| தயரதன் தன் |
– |
தசரத சக்ரவாத்தியினுடைய |
| குலம் மதலாய் |
– |
சிறந்த திருக்குமாரனே! |
| ஒரு சிலை வளைய |
– |
ஒப்பற்ற வில்லானது வளைய |
| அதனால் |
– |
அந்த வில்லாலே |
|
மதிள் இலங்கை அழித்தவனே |
||
| களை கழுநீர் |
– |
களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள் |
| மருங்கு அலரும் கணபுரத்து |
– |
சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற |
|
என் கருமணியே |
||
| இளையவர்கட்கு |
– |
இளையவர்கள் விஷயத்திலே |
| அருள் உடையாய் |
– |
கருணை பொருந்தியவனே! |
|
இராகவனே! தாலேலோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள்புரிந்தான்; இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள்புரிந்தான் என்றிறே பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.
English Translation
Sleep, O Raghava, benevolent to younger brothers, Talelo! My Dark gem-Lord of Kannapuram where red water-lilies grow everywhere in thickets. Your dark fragrant coiffure keeps slipping. You are the emancipator of Dasaratha’s lineage. You destroyed the fortified Lanka city wielding a matchless bow.
