(726)

(726)

மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே

அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே

கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே

சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ

பதவுரை

மலை அதனால் அணைகட்டி

–

மலைகளைக் கொண்டு ஸேதுபந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே

–

அரணையுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து

–

அலையெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு

–

தேவர்களுக்கு
அமுது

–

அம்ருதத்தை
அருளிச்செய்தவனே

–

கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம்வாழும் கணபுரத்து

–

ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற

என் கருமணியே

சிலைவலவா

–

(ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே

–

வீரனே!

சீராமா! தாலேலோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சேவகனே = சேவகம் என்று பராக்கிரமத்துக்குப் பெயராதலால், மஹாவீரனே என்றபடி சிலைவலவா! சேவகனே! என்ற சேர்த்தியால், சார்ங்கமும் மிகை என்னும் படியான வீரப்பாடுடையவன் என்பது போதரும்

English Translation

Sleep, my brave bow-wielding Srirama, Talelo! O Dark-gem-Lord of Kannapuram, where master craftsmen reside! You made a bridge of rocks across the ocean and destroyed the fortified Lanka. You churned the Milk Ocean and gave ambrosia to the gods!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top