(723)
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ
பதவுரை
| பார் ஆளும் படர்செல்வம் |
– |
பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை |
| பரதன் நம்பிக்கே |
– |
ஸ்ரீ பரதாழ்வானுக்கே |
| அருளி |
– |
நியமித்துவிட்டு |
| ஆரா அன்பு இளையவனோடு |
– |
பரிபூர்ணமான பக்திப்பெருங்காதலையுடைய இளையபெருமாளுடன் கூட |
| அருகானம் அடைந்தவனே |
– |
(புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே! |
| சீர் ஆளும் வரை மார்பா |
– |
வீரலெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலைபோன்ற திருமார்பையுடையவனே! |
|
திருக்கண்ணபுரத்து அரசே- |
||
| தார் ஆளும் நீள் முடி |
– |
மாலையோடு கூடின சிறந்த திருமுடியையுடையவனே! |
|
என் தாசரதீ! தாலேலோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வநவாஸஞ் செல்லும்போது இராமபிரான் இளையபெருமாளை நோக்கி இளையோய் நான் போகிறேன். நீ இங்கேயிருப்பாயாக என்றபோது, அவர் தமது கைங்கரியருசியையும் பிரியில் தரியாமையையும் பரக்கப்பேசித் தம்மையுங்கூட்டிக் கொண்டு போகும்படி செய்தனராதலால் ஆராவன்பிளையவனோடு என்றார். (அருங்கானம்) கல் நிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று பின்னுந் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம் (பெரிய திருமடல்) என்றார் கலியனும்.
English Translation
Sleep. O Illustrious Dasarathi with long hair adorned by a Tulasi wreath, Talelo! O king of Tiru Kannapuram with a strong mountain-like chest! You gave up the wealth of kingship to your brother Bharata; and went into the forest with your devoted brother Lakshmana!
