(706)

(706)

மங்கல நல்வன மாலைமார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி

பொங்கிள வாடை யரையில்சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து

கொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழலினி தூதிவந்தாய்

எங்களுக் கேயொரு நாள்வந்தூத உன்குழ லின்னிசை போதராதே

பதவுரை

மங்கலம்

–

மங்களகரமாய்
நல்

–

விலகூஷணமான
வனமாலை

–

வனமாலையானது
மார்பில்

–

மார்விலே
இலங்க

–

பிரகாசிக்க
மயில் தழைப்பீலி

–

மயிலிறகுகளே
சூடி

–

சூடிக்கொண்டும்
பொங்கு இள ஆடை

–

பளபளவென்ற மெல்லிய ஆடையை
அரையில் சாத்தி

–

அரையிலே சாத்திக் கொண்டும்
பூ கொத்து

–

பூங்கொத்துக்களை
காதில்

–

காதிலே
புணரப் பெய்து

–

மிகவும் பொருந்த அணிந்து கொண்டும்

கொங்கு நறு சூழ

லார்களோடு

–

தேன்மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்களோடு
குழைந்து

–

ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்குவீடாக)
குழல்

–

புல்லாங் குழலை
இனிது ஊதி வந்தாய்

–

போக்யமாக ஊதிக்கொண்டு வந்தாய்;
ஒருநாள்

–

ஒரு நாளாகிலும்
எங்களுக்கே

–

எங்களுக்காக
வந்து ஊத

–

வந்து ஊதும்படி
உன் குழலின் இசை

–

உனது குழலின் இசையானது
போதராது

–

வரமாட்டாதுகாண்.

English Translation

With an auspicious flower garland adorning your chest, wearing the tail-feather of a peacock on your head and a soft thin cloth on your body, sticking a bunch of flowers behind your ear, you blend with flower-coiffured dames, and come here sweetly playing your flute. At least one day, will you not come and play your flute solely for us?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top