(705)

(705)

என்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல்

மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்

பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்

இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே

பதவுரை

என்னை

என்னை
வருக என

(இன்னவிடத்திற்கு) வாவென்று
குறித்திட்டு

ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு
இனம் மலர் முல்லையின் பந்தர்நீழல்

நிறைந்த மலர்களையுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே
மன்னியவளை

(வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை
புணர புக்கு

ஸம்ச்லேஷிக்கப் போய்
மற்று என்னை கண்டு

பிறகு என்னைப் பார்த்து
உழறா

கலங்கி
நெகிழ்ந்தாய்

அப்பாலே நழுவினாய்;
பொன் நிறம் ஆடையை

பீதாம்பரத்தை
கையில் தாங்கி

கையிலே  தாங்கிக் கொண்டு
பொய்

பொய்யாக
அச்சம்  காட்டி

நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு
நீ போதி ஏலும்

நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும்
இன்னம்

இனி
ஈங்கு

இங்கே
என் கை அகத்து

என்னிடத்திற்கு
ஒரு நாள் வருதிஏல்

ஒரு நாளாகிலும் வருவாயாகில்

( அப்போது)

நான் என் சினம் தீர்வன்

நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [என்சினம் தீர்வன்நானே] என்கிறவிடத்தைக் கோயிலில் திருவத்யயநோத்ஸவதத்தில் ”உய்ந்த பிள்ளை” என்பாரொரு அரையர் அபிநயிக்கும்போது, கையாலே அடிப்பதும் காலாலே துவைப்பதுமாய் அபிநயித்தார்.  அதாவது, – மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும்  என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்பதாகக் கருத்தை விரித்தார்.  அப்போது கோஷ்டியில் எழுந்தருளியிருந்த எம்பார் இங்ஙனே அரையர்காட்டிய அபிநயத்தைக் கடாக்ஷித்து அரையர்க்கு ராஸிக்யம் போராதென்று திருவுள்ளம் பற்றி, ” கெடுவாய்! அப்படி அவள் செய்தாளாகில் என்றிருக்கிற கண்ணனுக்கு அது வருத்தமோ! வேப்பிலையுருண்டையோ? இது அவனுக்கு “*******” மாகுமன்றோ ஆகையால் அதுவன்று கருத்து; முகங்கொடுக்காமல் முகத்தை மாறவைத்து என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்னுங் கருத்துத் தோன்ற, கையிட்டு முகத்தை மறைத்துத் திரியவைத்தருளிக் காட்ட வேணுமென்று தாம் அவ்வாறாக அபிநயித்துக் காட்டினார் என்று ப்ரஸித்தம்.

English Translation

O Lord who prefers the serpent-couch! We are not the girls of those old times, nor are we your favored ones with dark eyes that match the bumble-bees. Pray stop coming to our place at odd hours. Infatuated by your beautiful clothes, auspicious face, coral lips and; dark curls, we were taken in by your lies. One day is enough! No more of your stories, Sir, please go!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top