(704)

(704)

பையரவிண்ணைப்பள்ளியினாய் பண்டையோமல்லோம்நாம் * நீயுகக்கும்

மையரியொண்கண்ணினாருமல்லோம் வைகியெம்சேரிவரவொழிந்*

செய்யவுடையுந்திருமுகமும் செங்கனிவாயுங்குழலுங்கண்டு*

பொய்யொருநாள்பட்டதேயமையும் புள்ளாவம் பேசாதேபோகுநம்பீ!

பதவுரை

பை அரவு இன் அணை பள்ளியினாய்

பாடங்களையுடைய இனிய சேஷ சயனத்திலே பள்ளி கொள்பவனே!
நம்பி

பூர்ணனானவனே!
நாம்

நாங்கள்
பண்டையோம் அல்லோம்

உன் மாயைப் பேச்சு வலையில்

அகப்படுகைக்கு பழைய படி ஏமாந்தவர்களல்ல

நீ உகக்கும்

நீ விரும்பத்தக்கவர்களாய்
மை

மையணிந்து
அரி ஒண்

மான் போலழகிய
கண்ணினாரும் அல்லோம்

கண் படைத்தவர்களான பெண்களுமல்லோம்;
வைகி

காலவிளம்பஞ் செய்து
எம் சேரி

எமது அகத்துக்கு
வரவு ஒழி நீ

வருவதை இனி நீ விட்டிடு;
செய்ய உடையும்

அழகிய பீதாம்பரத்தையும்
திருமுகமும்

திருமுக மண்டலத்தையும்
செம் கனி வாயும்

சிவந்த கோவைக்கனி போன்ற அதரத்தையும்
குழலும்

கூந்தல் முடியையும்
கண்டு

பார்த்து (அவற்றில் ஈடுபட்டு)
பொய்

உன் பொய் வார்த்தைகளில்
ஒரு நாள் பட்டதே அமையும்

ஒரு நாள் பட்டபாடு போதுமே;
புள்ளுவம்

க்ருத்ரிமமான வார்த்தைகளை
பேசாதே

(மறுபடியும்) சொல்லாமல்
போகு

(உன் தேவிமார்களிடத்தே) போய்ச்சேர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வைகி என்றதன் கருத்து யாதெனில், ‘உங்களிருப்பிடத்திற்கு மற்றும் எத்தனையோ பேர் வருகிறாப்போலே நானுமொருவன் வந்தாலென்ன?  என்னையேன் போகச் சொல்லுகிறாய்? என்று கண்ணபிரான் கேட்க: எல்லாரும் வரும் போதில் உன்னை நான் வரவேண்டாவென்று சொல்லவில்லை; பிறர்க்கு அதிசங்கை உண்டாம்படி அகாலத்திலே வருவதைத் தான் மறுக்கிறேன்” என்கிறாள் என்க.  பிறகு கண்ணபிரான் ” நங்காய்! இதற்கு முன் சொல்லாத வார்த்தைகளை இன்று புதிதாகச் சொல்லுகிறாயே! என்னை வேற்றுமனிசனாக நினைத்து விட்டாயே!” என்ன, உன் கள்ளச் செயல்களையும்  க்ருத்ரிமபாஷணங்களையும் முன்பு நம்பிப் பட்டது போதும்; இனி வேண்டா என்கிறாள்.  புள்ளுவம் – வஞ்சகம்.

English Translation

O Lord Vasudev, with arms that took on the wrestlers! The moment this sinful self fell asleep, you slipped away in the middle of the night, leaving me alone on the settee. That night and all of the next day you spent embracing girls. Why have you come to hold my waist now? My dear Sir, would you please see your way out and leave?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top