(700)

(700)

கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்

மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து

புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை

மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே

பதவுரை

மலர் கரு கூந்தல்

–

புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர்

முடியையுடையவளான

ஒருத்தி தன்னை

–

ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து

–

கடைக்கண்ணால் பார்த்துவிட்டு
ஆங்கே

–

அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்திதன் பால் மனம் மருவி வைத்து

–

வேறொரு பெண்பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து, (அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு

–

வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து

–

உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு

–

வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து

–

(ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,  ஆக இத்தனை பேரையும் ஏமாத்தி விட்டு)
புரி குழல் மங்கை     ஒருத்தி தன்னை

–

கடை குழன்று சுருண்ட கூந்தலையுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி

–

கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும்

–

அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை

–

பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய்

–

இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே

–

நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை

–

உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது

–

வளர்ந்து வாராநின்றன;
ஆல்

–

அந்தோ!.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண் என்று குறிப்பிட்டவாறு மென்ப.

English Translation

You gave sidelong glances to a flower-coiffured dame; at the same time, you let your heart wander to another dame; you gave word to yet another and misled an innocent other one, then stood embracing a coiffured maiden elsewhere. O Lord who broke the Arjuna trees! As you grow, your tricks also grow with you, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top