(700)
கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து
புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே
பதவுரை
| மலர் கரு கூந்தல் |
– |
புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர் |
|
முடியையுடையவளான |
||
| ஒருத்தி தன்னை |
– |
ஒரு பெண் பிள்ளையை |
| கடைக் கணித்து |
– |
கடைக்கண்ணால் பார்த்துவிட்டு |
| ஆங்கே |
– |
அப்படியிருக்கச் செய்தே. |
| ஒருத்திதன் பால் மனம் மருவி வைத்து |
– |
வேறொரு பெண்பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து, (அவளையும் விட்டு) |
| மற்று ஒருத்திக்கு |
– |
வேறொரு பெண்ணிடத்தில் |
| உரைத்து |
– |
உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து |
| ஒரு பேதைக்கு |
– |
வேறொரு பெண்ணுக்கு |
| பொய் குறித்து |
– |
(ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து, ஆக இத்தனை பேரையும் ஏமாத்தி விட்டு) |
| புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை |
– |
கடை குழன்று சுருண்ட கூந்தலையுடையவளான ஒரு இளம் பெண்ணோடு |
| புணர்தி |
– |
கலவி செய்யா நின்றாய்; |
| அவளுக்கும் |
– |
அந்தப் பெண்ணுக்கும் |
| மெய்யன் அல்லை |
– |
பொய்யனாயிரா நின்றாய்; |
| மருது இறுத்தாய் |
– |
இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே! |
| உன் வளர்த்தியோடே |
– |
நீ வளர்வதோடு கூடவே |
| உன் தன் மாயை |
– |
உன்னுடைய கள்ளங் கவடுகளும் |
| வளர்கின்றது |
– |
வளர்ந்து வாராநின்றன; |
| ஆல் |
– |
அந்தோ!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண் என்று குறிப்பிட்டவாறு மென்ப.
English Translation
You gave sidelong glances to a flower-coiffured dame; at the same time, you let your heart wander to another dame; you gave word to yet another and misled an innocent other one, then stood embracing a coiffured maiden elsewhere. O Lord who broke the Arjuna trees! As you grow, your tricks also grow with you, alas!
