(687)

(687)

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

பதவுரை

கொல் நவிலும்

(பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல்

கூர்மையான வேலாயுதத்தையுடைய
குலசேகரன்

குலசேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்

நிலை பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வடவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது
பொன் இயலும் சே அடிகள்

பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான்

ஸேவிப்பதற்கு
புரிந்து

ஆசைப்பட்டு
இறைஞ்சி

வணங்கி
சொன்ன

அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ்

ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப்பதிகத்தை
வல்லார்

கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள்

அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்று திருவேங்கடக் கலம்பகத்திற் கூறியது காண்க.

அடிவரவு – ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு. ஸ்ரீமந்நாராயணனை யன்றித் தமக்கு வேறு சரணமில்லாமையை அநேக த்ருஷ்டாந்த பூர்வகமாகத் திருவித்துவக் கோட்டம்மான் முன்னிலையில் விண்ணப்பஞ் செய்கிறார்.

English Translation

This decad of pure Tamil songs were sung by sword-as-sharp-as-death Kulasekara, desirous of seeing the Venkatam Lord’s golden feet. Those who master it will be devotees, dear to the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top