(676)
அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு
சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே
பதவுரை
| அம் கை ஆழி |
– |
அழகிய திருக்கையிலே திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள |
| அரங்கன் |
– |
ஸ்ரீரங்கநாதனுடைய |
| அடி இணை |
– |
திருவடிகளில் |
| தங்கு சிந்தை |
– |
பொருந்திய மனமுடையவராய் |
| தனி பெரு பித்தன் ஆம் |
– |
லோக விலக்ஷணரான பெரியபித்தராய் |
| கொங்கர் கோன் |
– |
சேரதேசத்தவர்களுக்குத் தலைவரான |
| குலசேகரன் |
– |
குலசேகராழ்வார் |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| சொல் |
– |
இப்பாசுரங்களை |
| இங்கு |
– |
இவ்விபூதியிலே |
| வல்லவர்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
| ஏதம் ஒன்று இல்லை |
– |
(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாகமாட்டாது. |
English Translation
These songs by Kulasekara, King of the Western tract, sung with extreme madness for the discus-wielding-Lord Aranga are offered at his feet with devotion. Those who master it will have no affliction here or hereafter.
