(676)

(676)

அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு

சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்

கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்

இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே

பதவுரை

அம் கை ஆழி

–

அழகிய திருக்கையிலே திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள
அரங்கன்

–

ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை

–

திருவடிகளில்
தங்கு சிந்தை

–

பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம்

–

லோக விலக்ஷணரான பெரியபித்தராய்
கொங்கர் கோன்

–

சேரதேசத்தவர்களுக்குத் தலைவரான
குலசேகரன்

–

குலசேகராழ்வார்
சொன்ன

–

அருளிச்செய்த
சொல்

–

இப்பாசுரங்களை
இங்கு

–

இவ்விபூதியிலே
வல்லவர்க்கு

–

ஓதவல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை

–

(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாகமாட்டாது.

English Translation

These songs by Kulasekara, King of the Western tract, sung with extreme madness for the discus-wielding-Lord Aranga are offered at his feet with devotion. Those who master it will have no affliction here or hereafter.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top