(675)
பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே
பதவுரை
| யாவரும் |
– |
இவ்வுலகத்தாரடங்கலும் |
| எனக்கு |
– |
என் வரைக்கும் |
| பேயரே |
– |
பைத்தியக்காரர்கள் தான்; |
| யானும் |
– |
(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும் |
| எவர்க்கும் |
– |
எவர்களுக்கும் |
| ஓர் பேயனே |
– |
ஒரு பைத்தியக்காரன் தான்; |
| இது |
– |
இவ்விஷயத்தை |
| பேசி |
– |
(விரிவாகச்) சொல்வதனால் |
| என் |
– |
என்ன ப்ரயோஜநமுண்டு? |
| ஆயனே |
– |
‘ஸ்ரீகிருஷ்ணனே! |
| அரங்கா |
– |
ஸ்ரீரங்கநாதனே!’ |
| என்று அழைக்கின்றேன் |
– |
என்று (பகவந்நாமங்களைச் சொல்லி) கூவாநின்றேன்; |
|
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ???? ???????? ?????? ???????? (கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத்தக்கவனாவன்) என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற, அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.
English Translation
To the world I am mad. To me the world is mad. Alas! What use dilating on this? “O Cowherd-Lord!”, I call, mad with love for the Lord of Arangam, My master.
