(667)

(667)

அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம்

எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்

கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்

சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே.

பதவுரை

அல்லி மாமலர் மங்கைநாதன்

அகவிதழ்களையுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான
அரங்கன்

ஸ்ரீரங்கநாதனுடைய
மெய்அடியார்கள் தம்

உண்மையான பக்தர்களுடைய
என்றும் மேவு மனத்தன் ஆம்

எப்போதும் பொருந்திய திருவுள்ளத்தை யுடையவரும்
கொல்லி காவலன்

கொல்லிநகர்க்கு அரசரும்
கூடல் நாயகன்

மதுரைக்கு அரசரும்
கோழி கோன்

உறையூருக்கு அரசருமான
குலசேகரன்

குலசேகராழ்வருடைய
சொல்லின்

ஸ்ரீஸூக்திளாலே அமைந்த
இன் தமிழ் மாலை வல்லவர்

இனிய தமிழ்ப்பாசுரங்களை ஒதவல்லவர்கள்
தொண்டர் தொண்டர்கள் ஆவர்

தாஸாநுதாஸராகப் பெறுவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லையி லடிமைத்திறமாவது- “அடியா ரடியார்தம் மடியா ரடியார்தமக்கடியார் தம் அடியா ரடியோங்களே” என்கிற சேஷத்வகாஷ்டை.

அடிவரவு: தேட்டு தோடேறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி மெய்.

ஸாம்ஸாரிகர் படியில் மிக்க வெறுப்பு உண்டாகி, அவர்களைக் காண்பதும் அவர்களோடு ஸஹவாஸஞ் செய்வதும் அஸஹ்யமான நிலைமை தமக்குப் பிறந்தபடியை அருளிச்செய்கிறார்.

English Translation

This sweet of decad of Tamil songs, by Kulasekara, Ruler of Kolli, King of Kudal(Madurai) saying, “When will I join the band of devotees in Arangam where the Lord resides with lotus-dame Lakshmi?”, –those who master it will be devotees of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top