(664)

(664)

காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்

ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை

சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால்

வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே

பதவுரை

கார் இனம் புரை

மேகங்களின் திரளை ஒத்த
மேனி

திருமேனியையும்
நல் கதிர்

அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய்

முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பையுடைய சிவந்த திருப்பவளத்தையும்
ஆரம் மார்வன்

முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும்

ஸ்ரீரங்கநாதனாகிற
அரும்பெரும் சுடர்ஒன்றினை

அருமை பெருமையுள்ள விலக்ஷணமானதொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி

கிட்டி அநுபவிக்கவேணுமென்கிற சிந்தையையுடையவராய்
சேர்ந்து

(அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த

(பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள்

ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர்

வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு

இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம்

என் மனமானது
ஒரு வாரம் ஆகும்

ஒப்பற்ற அன்பையுடையதாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பல காளமேகங்கள் திரண்டாற்போன்று விளங்குகின்ற திருமேனியையும், அத்திருமேனியில் ஓடுகின்ற விலக்ஷணமான லாவண்யத்தையும், முத்துவரிசை போன்ற புன் முறுவலையுமுடைய திருவதரத்தையும், முத்துமாலையணிந்த திருமார்பையுமுடையனான ஸ்ரீரங்கநாதனென்கிற ஒரு பரஞ்சோதியை அடிபணிந்து கண்ணுங் கண்ணீருமாய் நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே என் நெஞ்சமானது அநந்யப்ரயோஜநமாய் ஆட்பட்ட தென்கிறார்.

English Translation

The Lord of Arangam has a dark frame like gathered monsoon-clouds, with a soft radiance, a pearly-white smile, coral-red lips, and a garlanded chest. Devotees shed tears with love in their hearts and stand waiting for a glimpse of that rare sight. My heart is a slave at their holy feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top