(663)

(663)

ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான்

பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட

தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே

காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே

பதவுரை

ஆதி

ஜகத்காரணபூதனாய்
அந்தம்

ப்ரளயகாலத்திலும் வாழ்பவனாய்
அநந்தம்

ஸர்வவ்யாபியாய்
அற்புதம் ஆன

ஆச்சரிய பூதனாய்
வானவர் தம்பிரான்

அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய
மா மலர் பாதம்

சிறந்த மலர்போன்ற திருவடிகளை
சூடும் பத்தி இலாத

சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத
பாவிகள் உய்ந்திட

பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி
எங்கும் திரிந்து

ஸர்வதேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து
தீது இல்

குற்றமற்ற
நல் நெறி

நல்வழிகளை
காட்டி

(தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக்கொண்டு
எம்மான்

நமக்குத் தலைவனான
அரங்கனுக்கே

ஸ்ரீரங்கநாதனுக்கே
காதல் செய்

பக்தி பூண்டிருக்கின்ற
தொண்டர்க்கு

பாகவதர்கள் விஷயத்தில்
என் நெஞ்சம்

எனது மனமானது
எப்பிறப்பிலும்

எந்த ஜன்மத்திலும்
காதல் செய்யும்

அன்பு பூண்டிருக்கும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-ஸகல ஜகத்காரண பூதனாய் ஸர்வவ்யாபகனான எம்பெருமானிடத்து அன்பு இல்லாதவர்களான பாவிகளும் அவ்வன்பைப் பெற்று உஜ்ஜீவிக்குமாறு தேச தேசாந்தரங்களெங்கும் ஸஞ்சரித்து ஸ்வரூபாநுரூபமான அர்த்த விசேஷங்களை ஆங்காங்கு உபந்யாஸமுகேந உபதேசித்துவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே நான் பிறவிதோறும் அன்பு பாராட்டுவேன் என்கிறார். “எப்பிறப்பிலும்” என்ற சொற்போக்கால், அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் பக்திபண்ணுவதற்காக இன்னும் பல ஜந்மங்களைத் தாம்பெற விரும்பியிருக்குமாறு விளங்கும்.

English Translation

The Lord of is the Lord of celestials, the eternal wonder-Lord, the beginning and the end. Wicked people, who lack devotion, do not wear the flowers of his feet on their heads. To redeem them and show the right and faultless path, devotees go about offering service with love in their hearts for the Lord. In every life here and hereafter, my heart is filled with love for them.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top